கோவை வெடிக்குண்​டு நாடக நாயகன் ரத்தின சபாப​தியைக் கண்டி​த்து PFI ஆர்ப்பாட்ட​ம்

அமைதியாக திகழும் தமிழகத்தை பீதிவயப்படுத்தும் நோக்கில் கடந்த 2006 ஜூலை மாதம் 22-ஆம் தேதி 'கோவையை தகர்க்க சதி - வெடிக்குண்டுகளுடன் தீவிரவாதிகள் கைது' எனக்கூறி அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து கோவை மாநகரத்தையும், தமிழக மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தினார் அன்றைய கோவை மாவட்டத்தின் உளவுத்துறை உதவி ஆணையர் ரத்தின சபாபபதி.

இதனைத் தொடர்ந்து ரத்தின சபாபதியின் ஜோடிக்கப்பட்ட வழக்கின் உண்மை நிலையை வெளிக்கொணர விசாரணைக்கோரி மனித நீதிப்பாசறை(பாப்புலர் ஃப்ரண்ட்) மற்றும் மனித உரிமை, சமூக ஆர்வலர்கள் தீவிரமாக வலியுறுத்தியதைத் தொடர்ந்து அரசு சி.பி.சி.ஐ.டியின் எஸ்.ஐ.டி பிரிவு விசாரணைக்கு உத்தரவிட்டது.

இக்குழு அளித்த இறுதி விசாரணை அறிக்கையில், ரத்தின சபாபதி நடத்தியது போலி வெடிக்குண்டு நாடகம் எனவும், இதற்காக வழக்கை திட்டமிட்டு ஜோடித்துள்ளார் எனவும் கூறியிருந்தது.

இதனைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடர்ந்து போராட்டங்களை நடத்திவருகிறது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

இந்நிலையில், முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கைகளை புறக்கணித்த தி.மு.க அரசு ரத்தின சபாபதியை டி.என்.பி.எஸ்.சி தேர்வாணைய குழு உறுப்பினராக பதவி நியமனம் அளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து எஸ்.ஐ.டி அறிக்கையின் அடிப்ப்படையில் ரத்தினசபாபதி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த 5/03/2011 அன்று மதுரையிலும், 06/03/2011 அன்று சென்னையிலும் மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டங்களில் நீதியை நிலைநாட்ட விரும்பும் நோக்கில் சமூக ஆர்வலர்களும், ஏராளமான பொதுமக்களும் கலந்துக்கொண்டனர்.

POPULAR FRONT OF INDIA - KOOTHANALLUR

Related

SDPI 414554950524511358

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item