முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு
http://koothanallurmuslims.blogspot.com/2011/03/blog-post_4294.html
சென்னை:தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து மூன்று தொகுதிகளில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். துறைமுகம், வாணியம்பாடி, நாகப்பட்டனம் ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிடுகிறது முஸ்லீம் லீக்.
இத்தொகுதிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்ய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உயர் மட்டக்குழு கூட்டம் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் முஸ்லிம் லீக் தலைமையகமான சென்னை, மரைக்காயர் லெப்பைத் தெருவில் உள்ள காயிதே மில்லத் மன்ஸிலில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 3 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
வேட்பாளர்கள் விவரம்:
1) துறைமுகம் – திருப்பூர் அல்தாப் ஹுசைன்
2) வாணியம்பாடி – எச்.அப்துல் பாசித்
3) நாகப்பட்டினம் – எம்.முஹம்மது ஷேக் தாவூது
ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
1) துறைமுகம் – திருப்பூர் அல்தாப் ஹுசைன்
2) வாணியம்பாடி – எச்.அப்துல் பாசித்
3) நாகப்பட்டினம் – எம்.முஹம்மது ஷேக் தாவூது
ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் திமுகவின் சின்னமான உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள் எனத் தெரிகிறது.
MUSLIM LEAGUE