நிரபராதிகளை உடனடியாக விடுதலைச் செய்யவேண்டும் - SDPI

இந்தியாவில் நடந்த குண்டு வெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கினைக் குறித்து அஸிமானந்தா நீதிமன்றத்தில் அளித்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் முன்னர் இவ்வழக்குகளில் கைதுச் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட நிரபராதிகளான அப்பாவி முஸ்லிம்கள் அனைவரையும் உடனடியாக விடுதலைச் செய்ய வேண்டுமென எஸ்.டி.பி.ஐ மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளது.

அஸிமானந்தா அளித்த வாக்குமூலம் இந்தியாவில் பயங்கரவாதத்திற்கு காரணம் என்ன என்பதுக் குறித்து எஸ்.டி.பி.ஐ முன்னரே கூறியதை அட்சரம் பிசகாமல் உறுதிச் செய்வதாக எஸ்.டி.பி.ஐயின் தேசியத் தலைவர் இ.அபூபக்கர் மற்றும் தேசிய பொதுச்செயலாளர் எ.சயீத் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மலேகான், அஜ்மீர், சம்ஜோதா, மக்கா மஸ்ஜித் ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளின் விசாரணையில் முஸ்லிம்களோடு, குறிப்பாக முஸ்லிம் இளைஞர்களோடு புலனாய்வு அதிகாரிகள் பாரபட்சமாக நடந்துக்கொள்வதாக ஏற்கனவே எஸ்.டி.பி.ஐ தெரிவித்திருந்தது.

நாட்டில் ஒவ்வொரு குண்டுவெடிப்பு நிகழும்தோறும் முஸ்லிம் பெயர்களை தாங்கிய அமைப்புகளின் பெயரைக் கூறி முஸ்லிம் இளைஞர்களை வேட்டையாடி கைதுச் செய்வது புலனாய்வு ஏஜன்சிகளின் வழக்கமான பணியாகும். மூன்றாவது முறையிலான சித்திரவதைகள் மூலம் அவர்களை நிர்பந்தப்படுத்தி வாக்குமூலம் வாங்குவது அடுத்த கட்டமாகும். இவ்வகையில் பொய் வழக்குகள் சுமத்தப்பட்டவர்களீன் வாழ்க்கையை சீரழிக்கும் சூழல்தான் வழக்கமாக ஏற்பட்டது.

1992 ஆம் ஆண்டிற்கு பிறகு நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளைக் குறித்தும் பரிபூரணமான விசாரணை தேவை என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு என எஸ்.டி.பி.ஐ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய தலைவர்களுக்கு இக்குண்டுவெடிப்புகளில் தொடர்புள்ளது என அஸிமானந்தாவின் வாக்குமூலம் தெரிவிக்கிறது. இச்சூழலில் இந்திரேஷ்குமார் உள்பட ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை கைதுச் செய்ய அதிகாரிகள் தயாராக வேண்டும்.

ஹிந்து-முஸ்லிம் சமூகங்களிடையே பகைமையையும், துவேஷத்தையும் வளர்த்தும் ஆர்.எஸ்.எஸ்ஸின் சித்தாந்தத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதன் மூலமே தேசத்தை அமைதியை நோக்கி வழிநடத்த முடியும். இதற்காக ஆர்.எஸ்.எஸ்ஸின் ஷாகாக்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் உன்னிப்பாக கண்காணிக்க அதிகாரிகள் முயலவேண்டும்.

ஹிந்துத்துவா தீவிரவாதத்துடனான மிருதுவான அணுகுமுறையை முடிவுக்குக் கொண்டுவந்து இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு எதிராக வலுவான நிலைப்பாட்டை மேற்கொள்ள காங்கிரஸ் கட்சி தயாராகவேண்டும் என எஸ்.டி.பி.ஐ தலைவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Related

SDPI 3905361732926580923

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item