RSS-ல் தீவிரவாதிகளுக்கு இடமில்லை - மன நோயாளி மோகன் பாகவத்

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் தீவிரவாதிகளுக்கு இடமில்லை என அதன் தேசிய தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சிலருக்கு தீவிரவாத சிந்தனையுண்டு. இவர்களிடம் அமைப்பை விட்டு வெளியேறுமாறு கோருவோம்.

மக்கா மஸ்ஜித், அஜ்மீர், மலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புகளுடன் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு எவ்வித தொடர்புமில்லை. இத்தகைய பிரச்சாரங்கள் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு எதிரான சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

ஆர்.எஸ்.எஸ் ஒரு குறிப்பிட பிரிவினருக்கு உரியது அல்ல. எல்லா பிரிவினரையும் ஐக்கியப்படுத்துவதுதான் அமைப்பின் நோக்கம். ஹிந்துத்துவம் என்பது எங்களது தனிப்பட்ட கொள்கை.

சி.பி.ஐக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இவ்வாறு மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் முழுநேர ஊழியரான பயங்கரவாதி அஸிமானந்தா நீதிமன்றத்தில் குண்டுவெடிப்புகள் குறித்த குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சாத்தான் வேதம் ஓதும் கதையாக பாகவத்தின் அறிக்கை வெளியாகியுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Related

RSS 3522465985309016922

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item