IFF நடத்திய "நீதியைத் தேடும் பாப்ரி மஸ்ஜித்"

வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் நலனுக்காக சவூதி அரேபியாவில் செயல்பட்டுவரும் அமைப்பு இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் (IFF). இவ்வமைப்பின் தமிழ் பிரிவு சார்பாக ஜுபைல் நகரில் "நீதியைத்தேடும் பாப்ரி மஸ்ஜித்" என்ற தலைப்பில் கலந்தாய்வு அமர்வு நடந்தேறியது.

ஜுபைல் இண்டர்நேசனல் ரெஸ்ட்டாரெண்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஜுபைல் ஏரியா தலைவர் அஹ்மத் சிராஜ் தலைமை வகித்தார். ஹஸன் முஹம்மது IFF ஆற்றிவரும் பணிகளைக் குறித்து உரை நிகழ்த்தினார். பொறியாளர் நாகூர்மீரான் சிறப்புரையாற்றினார்.

அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது: "நான்கு நூற்றாண்டுகளாக இந்திய முஸ்லிம்கள் தொழுகை நடத்திய பாப்ரி மஸ்ஜித் முஸ்லிம்களுக்கே சொந்தமானதாகும். இந்தியாவில் பெரும்பாலான அரசியல் கட்சிகளும், ஊடகங்களும், நீதிபீடங்களும் சங்க்பரிவார்களுக்கு அனுகூலமான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளனர்.

பாப்ரி மஸ்ஜித் ஒரு இந்து-முஸ்லிம் பிரச்சனையல்ல. இந்தியாவின் மானப் பிரச்சனையாகும். பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் கட்டப்பட்டால் மட்டுமே இந்நாட்டை ஆள்பவர்கள் தேசத்தோடும், முஸ்லிம்களோடும் நீதியோடு நடந்தார்கள் என்று கூறவியலும். அதற்காக தேசத்தின் அனைத்து ஜனநாயக அமைப்புகளும், முஸ்லிம்களும் களமிறங்க வேண்டும்." இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியின் இறுதியாக நன்றியுரையை பிலால் முஹம்மது தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சவூதி வாழ் தமிழ் மக்கள் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்துக்கொண்டனர்.

செய்தி:தேஜஸ் - KOOTHANALLUR

Related

SDPI 4006272847769735653

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item