பேராசிரியர் கைவெட்டு சம்பவம்: 27 பேர் மீது குற்றப்பத்திரிகை

வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 54 பேர்களில் மீதமுள்ளவர்கள் தலைமறைவாக உள்ளதால் 27 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எர்ணாகுளம் மாவட்டம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் 600 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது சட்டவிரோத செயல் தடுப்புச்சட்டம், குற்றம் நிகழ்த்துவதற்கான சதித்திட்டம், கொலை முயற்சி, கடுமையான காயத்தை ஏற்படுத்துதல், வெடிப்பொருள் சட்டம், சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்துவது உள்பட குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இவ்வழக்கில் 255 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 200 முதல் 255 வரையிலான சாட்சிகள் போலீஸ்காரர்களாவர்.
செய்தி:தேஜஸ்