இஸ்லாமிய பங்கு வர்த்தகம் - மும்பையில் அறிமுகம்

மும்பை பங்கு சந்தையில் இஸ்லாமிய முறையிலான பங்கு வர்த்தகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான வசதியை தக்வா அட்வைசரி & சரீஅத் சொலுசன்ஸ் என்ற அமைப்புடன் இனைந்து மும்பை பங்கு சந்தை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த வர்த்தகத்தில் ஈடுபடும் அனைத்து நிறுவனங்களும் இஸ்லாமிய நிதி கொள்கைகளை பின்பற்ற கூடியவையாக இருக்கும். இதில் தற்போது TATA Consultancy Services, Bharthi Airtel, Reliance, Maruthi Suzuki போன்ற நிறுவனங்கள் இணைந்துள்ளன. இஸ்லாமிய பங்கு வர்த்தகத்தில் இணையும் நிறுவனங்கள், தக்வா அட்வைசரி நிறுவனத்தின் கடுமையான பரிசீலனைக்கு பிறகே வர்த்தகத்தில் ஈடுபட முடியும். இதில் இனைய விரும்பும் நிறுவனங்கள், மது, சூதாட்டம், வட்டி போன்ற வர்த்தகத்தில் ஈடுபட முடியாது.

இந்த பங்கு வர்த்தகத்தில் மத ரீதியான எந்த வித தடங்கலும் இல்லை. யார் வேண்டுமானலும் முதலீடு செய்யலாம். ஆரம்பித்த நாள் முதல் இஸ்லாமிய முறையிலான பங்கு வர்த்தகத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்து இருப்பதாக மும்பை பங்கு சந்தை தெரிவித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு, இந்தியாவில் முஸ்லிம்களி நிலை குறித்து ஆராய்ந்த சச்சார் கமிட்டி, முஸ்லிம்கள் முதலீட்டு விவகாரங்களில் மிகவும் பின் தங்கியுள்ளனர் என்று கூறியிருந்தது.

Source : Popular Front of India - Koothanallur

Related

stock market 6575219105472061769

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item