ஆக்கிரமிப்பிற்கெதிராக ஒன்றுபட முக்ததா அல் ஸத்ர் அழைப்பு
http://koothanallurmuslims.blogspot.com/2011/01/blog-post_4384.html
ஆக்கிரமிப்பு சக்திகளுக்கெதிராக கிடைக்கும் அனைத்து சக்திகளையும் பயன்படுத்தி போராட ஒன்றுபட வேண்டுமென ஈராக் ஷியா போராளித் தலைவர் முக்ததா அல் ஸத்ர் அழைப்பு விடுத்துள்ளார்.
4 ஆண்டுகளாக ஈரானில் வசித்துவந்த ஸத்ர் நேற்று முன்தினம் ஈராக் வந்தார். நஜஃபில் இமாம் அலி மஸ்ஜிதில் வைத்து அவருடைய கட்சித் தொண்டர்களிடையே உரையாற்றினார் அவர்.
அப்பொழுது அவர் கூறியதாவது: "அமெரிக்காவும், இஸ்ரேலும், பிரிட்டனும் ஈராக் மக்களின் பொது எதிரிகளாவர். ராணுவ ரீதியாகவும், அதல்லாத வழிகளிலும் ஆக்கிரமிப்பு சக்திகளை எதிர்த்துப் போராட வேண்டும். நமது கைகள் எந்தவொரு ஈராக் நாட்டவருக்கும் துரோகம் இழைக்காது. ஆக்கிரமிப்பு ராணுவத்தினர் மட்டுமே நமது லட்சியம். நாம் அனைவரும் ஒரே மக்கள். பரஸ்பரம் தாக்குதல் நடத்துபவர்களை அங்கீகரிக்கமாட்டோம். நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். ஈராக் மக்களுக்கு சேவை புரிய ஒரு வாய்ப்புக்கூட நாம் ஈராக் அரசுக்கு அளிப்போம். இவ்வாறு ஸத்ர் உரையாற்றினார்.
கடந்த ஆண்டு ஈராக்கில் நடந்த தேர்தலில் ஸத்ரின் ஷியா கட்சி 39 இடங்களை வென்றிருந்தது. நூரி அல் மாலிக்கின் அரசை ஆதரிக்கும் இக்கட்சிக்கு 7 அமைச்சர்கள் உள்ளனர். ஸத்ர் இனி நிரந்தரமாக ஈராக்கில் தங்குவார் என அவருடைய கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2003 ஆம் ஆண்டு அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு பிறகு ஸத்ரின் தலைமையிலான மஹ்தி ராணுவம் அமெரிக்க ராணுவத்தினருடன் பலமுறை கடுமையாக மோதியது. ஆனால், 2008 ஆம் ஆண்டு ஈராக் ராணுவத்தினருடனான மோதலுக்கு பிறகு ஆயுதங்களை ஒப்படைக்க தீர்மானித்தது.
KOOTHANALLUR MUSLIMS