கேரள மாநில SDPI தலைவராக வழக்கறிஞர் ஷெரீஃப் தேர்வு
தேர்தலில் புதிய கேரள மாநிலத் தலைவராக வழக்கறிஞர் கெ.பி.முஹம்மது ஷெரீஃப் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச் செயலாளர்களாக எம்.கே.மனோஜ்குமார் மற்றும் அப்துல் மஜீத் பைஸி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் இத்தேர்தலில் இதர நிர்வாகிகள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்களும் தேர்வுச் செய்யப்பட்டனர். தேர்தலுக்கு எஸ்.டி.பி.ஐயின் தேசிய பொதுச்செயலாளர் எ.சயீத் மற்றும் தேசிய செயலாளர் எம்.கே.பைஸி ஆகியோர் தலைமை வகித்தனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்