அயோத்தியில் ராமர்கோயில் கட்ட 67 ஏக்கர் நிலத்தையும் ஒதுக்கவேண்டுமாம் - அசோக் சிங்கால் கொக்கரிப்பு

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மொத்தமுள்ள 67 ஏக்கரையும் ஒதுக்க வேண்டும் என்று விசுவ ஹிந்து பரிஷத் (VHP) வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால், அயோத்தியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: அயோத்தி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். ராமர் கோவில் கட்டுவதற்கான கற்களை செதுக்கும் பணிகள் ஒரு மாதத்துக்குள் தொடங்கும்.

கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்கிவிட்டால் ஒன்றரை ஆண்டுக்குள் சுவாமி சிலைகளை நிறுவிவிடலாம் என்று கட்டடவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதர கட்டுமானப் பணிகள் ஆண்டுக்கணக்கில் நீடிக்கலாம். எனவே, கோவில் கட்டுமானப் பணிகளுக்காக ராம பக்தர்கள் தாராளமாக நிதி அளிக்க வேண்டும்.

அயோத்தியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 67 ஏக்கர் நிலத்தையும் ராமர் கோவில் கட்டுவதற்காக ஒதுக்க வேண்டும். இல்லையெனில் வி.எச்.பி. சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

கம்போடியாவில் உள்ள ராமர் கோவிலின் மாதிரியைப் பின்பற்றி அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்று ஜெகத்குரு சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்தா யோசனை கூறியுள்ளார்.

இது குறித்து அசோக் சிங்கால் கூறும்போது, இப்போதைய ராமர் கோவிலின் மாதிரி வடிவம் ஹிந்து மதத் தலைவர்கள் அனைவரையும் கலந்தாலோசித்த பின்னரே இறுதி செய்யப்பட்டுள்ளது, வேறு எந்த மாதிரி வடிவத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.

கூத்தாநல்லூர் முஸ்லிம்கள் 

Related

VHP 186093330764155905

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item