RSS பயங்கரவாதி சுரேஷ் நாயருடன் தொடர்புடைய 20 நபர்களின் விபரங்கள் சேகரிப்பு

அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பில் தொடர்புடைய கேரளாவைச் சார்ந்த சுரேஷ் நாயருக்கு நெருக்கமானவர்கள் 20 பேரின் விபரங்களை மாநில உள்துறை பாதுகாப்பு படை(ஐ.எஸ்.டி) சேகரித்துள்ளது.

இதில் பலரையும் ஆரம்ப கட்ட விசாரணைக்கு உட்படுத்தியுள்ளது. சுரேஷ் நாயர் சிக்கினாரா? இல்லையா? என்பதுக் குறித்து ராஜஸ்தான் ஏ.டி.எஸ் மாறுபட்ட தகவல்களை வெளியிட்டுக்கொண்டிருக்கும் வேளையில் கேரளாவில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

மாநில போலீசாரோ, க்ரைம் பிராஞ்சோ சம்பந்தப்படாமால் இந்த விசாரணை நடந்து வருகிறது. கேரளத்துடன் சுரேஷ் நாயருக்கு நீண்டகால தொடர்புள்ளது என ஐ.டி.எஸ் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆனால், இதனை ராஜஸ்தான் ஏ.டி.எஸ் பூரணமாக நம்பவில்லை என கருதப்படுகிறது.

சுரேஷ் நாயருடன் தொடர்புடைய 20 பேரிடம் ஐ.எஸ்.டி விசாரணை மேற்கொண்டுள்ளது. இதில் சிலர் அவருடைய குடும்ப உறுப்பினர்களாவர். வேறு சிலர் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களும், பிரச்சாரக்குகளுமாவர். சுரேஷ் நாயர் கேரளாவில் வசிக்கும் தனது குடும்பத்தினருக்கு தெரியாமலேயே பலமுறை அம்மாநிலத்திற்கு வந்து சென்றுள்ளார் எனவும், ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய செயற்குழு மூத்த உறுப்பினரான இந்திரேஷ் குமாருடனும் அவர் கேரளாவிற்கு வந்துள்ளார் என்ற தகவலும் ஐ.எஸ்.டிக்கு கிடைத்துள்ளது.

கேரளாவின் பல மாவட்டங்களிலும் நாச வேலைகளில் ஈடுபடும் நபர்களை தேசிய அளவில் நாசவேலைகளை நடத்துவதற்கு தேர்வுச் செய்யத்தான் சுரேஷ் நாயர் கேரளாவிற்கு வந்துள்ளார்.

இதற்கிடையே சுரேஷ் நாயர் ராஜஸ்தான் ஏ.டி.எஸ் வசம் சிக்கியதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று கூறுகிறது. இவர் அளித்த விபரங்களின் அடிப்படையில்தான் ஐ.எஸ்.டி விசாரணையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளையில்,சுரேஷ் நாயரின் கேரள மாநிலத் தொடர்புக் குறித்த விசாரணையை சீர்குலைக்க சிலர் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுரேஷ் நாயர் மலையாளி அல்ல எனவும், சுரேஷ் நய்யார் என்ற பெயரில் ஏற்பட்ட தவறான புரிதல்தான் காரணமெனவும் ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சுரேஷிற்கு மலையாளம் தெரியாது எனவும், அஜ்மீர் குண்டுவெடிப்பிற்கு பிறகு இவர் கேரளாவிற்கு வரவில்லை எனவும் சிலர் பத்திரிகை செய்திகளை வைத்து பிரச்சாரம் செய்கின்றனர்.

ராஜஸ்தான் ஏ.டி.எஸ் பரிசோதிக்க கூறிய தகவல்களைக் குறித்து விசாரணை நடத்திய ஐ.எஸ்.டி அளித்த ஆரம்பக்கட்டத் தகவல்களில் சுரேஷ் நாயர் கேரளாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடவில்லை என அதிக முக்கியத்துவம் அளித்து ஒரு பத்திரிகை வெளியிட்ட செய்தியில் மர்மம் நீடிக்கிறது.

செய்தி:தேஜஸ் - KOOTHANALLUR

Related

RSS 673371720903020732

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item