தமிழகத்தை குஜராத் போன்று மாற்ற வேண்டும்: இல.கணேசன் உளறல்

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் இல.கணேசன் காங்கயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர, தமிழகத்தில் ஒரு கட்சிக்கு மாற்று இன்னொரு கட்சி அல்ல. திராவிட கழகங்களுக்கு பதிலாக தேசிய கட்சி என்பதுதான் மாற்று.
தமிழகத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் காங்கிரஸ் கட்சியை விட பாரதிய ஜனதாவின் செல்வாக்கு 2 மடங்காக அதிகரித்துள்ளது. எனவே நாங்கள் தனித்தன்மையோடு தேர்தலை சந்திப்போம். தமிழகத்தை குஜராத் மாநிலம் போன்று மாற்ற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது எங்களது நோக்கம். தற்போது அது இயலாத காரியம் என்பது தெரியவந்துள்ளது.

எனவே டாஸ்மாக் மதுபானங்களுக்கு பதிலாக விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்தும் கள்ளை இறக்கி விற்பது மேலானது. எனவே கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என்பதை நாங்கள் ஆதரிக்கிறோம்.

இலங்கை கடற்படையால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், மத்திய- மாநில அரசுகள் அதை வேடிக்கை பார்ப்பதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது. இது கண்டிக்கத்தக்கது’’என்று தெரிவித்தார்.

நக்கீரன் - கூத்தாநல்லூர் முஸ்லீம்கள் 

Related

tamil nadu 2792485874611753093

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item