மனமாற்றத்திற்கு காரணம் சக முஸ்லிம் கைதி - அஸிமானந்தா

Kalim
மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியான ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கத்தைச் சார்ந்த சுவாமி அஸிமானந்தா, தான் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்ததற்கு காரணம் இதே வழக்கில் பொய்க் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப் பட்டுள்ள ஒரு முஸ்லிம் இளைஞருடனான நல்லுறவுதான் காரணம் என தெரிவித்துள்ளார்.

மாஜிஸ்ட்ரேட் முன்பாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்த சுவாமி அஸிமானந்தா இதுக்குறித்து கூறியதாவது: "நான் ஹைதராபாத்தில் சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்படும்பொழுது சக கைதிகளில் ஒருவர் அப்துல் கலீம் என்பவராவார்.

சிறைக்குள்ளே வைத்து கலீம் எனக்கு நிறைய உதவிச் செய்துள்ளார். எனது பொருட்களை எடுத்து வைக்கவும், உணவு மற்றும் தண்ணீர் கொண்டு தந்ததும் கலீம் ஆவார். கலீம் போன்ற நிரபராதிகள் சிறையில் வாடுவதைக்கண்டு இவ்வழக்கில் பிராயசித்தம் செய்வதற்காக எனது மனசாட்டி என்னைத் தூண்டியது.

அதனடிப்படையில்தான் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்தேன் என அஸிமானந்தா கூறியுள்ளான்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ் - KOOTHANALLUR

Related

RSS 3423261705135891335

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item