டாக்டர் ரெனீஃபிற்கு ஜாமீன்: உச்சநீதிமன்றம் உறுதிச்செய்தது

கேரள மாநிலம் முவாற்றுப்புழாவில் நபியவர்களை அவமதித்த பேராசிரியரின் கை வெட்டப்பட்ட வழக்கில் கைதுச் செய்யப்பட்ட டாக்டர் ரெனீஃபிற்கு கேரள உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை உச்சநீதிமன்றம் உறுதிச்செய்தது.

நீதிபதிகளான மார்கண்டேய கட்ஜு, ஞான் சுதா மிஷ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இத்தீர்ப்பை அளித்துள்ளது.

தாக்குதல் நடத்திய ஒருவருக்கு சிகிட்சை அளித்ததன் காரணமாக டாக்டர் ரெனீஃபிற்கு ஜாமீன் வழங்காமலிருக்க முடியாது. ரெனீஃபும் அவருடைய மனைவியும் மருத்துவர்களாவர். அவருடைய தந்தையும் டாக்டராவார் எனக் கூறிய உச்சநீதிமன்றம் ரெனீஃப் பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் எஸ்.டி.பி.ஐ உறுப்பினர் எனவும், பேராசிரியர் கை வெட்டப்பட்ட வழக்கில் சதித்திட்டத்தில் பங்கேற்றார் என போலீஸ் கூறியவாதத்தை நிராகரித்தது.

சதித்திட்டம் தீட்டியதுத் தொடர்பாக விசாரணையின்போது பரிசீலிக்க வேண்டிய விஷயமாகும். ஆதலால், தற்பொழுது ஜாமீன் வழங்காமலிருக்க முடியாது.

பாப்புலர் ஃப்ரண்ட் சட்டரீதியாக பதிவுச் செய்யப்பட்ட இயக்கமாகும், அது தடைச் செய்யப்பட்டதல்ல. எஸ்.டி.பி.ஐயோ தேர்தல் கமிஷனில் முறையாக பதிவுச் செய்துள்ளது. இந்த அமைப்புகளில் உறுப்பினராக செயல்படுவதால் ஜாமீன் அனுமதிக்காமலிருக்க முடியாது. இவ்வாறு உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

கூத்தாநல்லூர் - தேஜஸ்

Related

SDPI 7514829252619303921

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item