இடிக்கப்பட்ட இடத்தில் தற்காலிக மஸ்ஜித்

டெல்லி ஜங்புராவில் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டது எனக் கூறி டெல்லி வளர்ச்சி ஆணையத்தால் இடித்துத் தள்ளப்பட்ட அல் நூர் மஸ்ஜிதின் சிதிலங்களின் மீது மக்கள் தற்காலிக மஸ்ஜிதை கட்டினர்.

போலீஸாரின் எதிர்ப்பை புறக்கணித்துவிட்டு வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை நிறைவேற்றியதற்கு பிறகு தகரம் மற்றும் மூங்கில்களைக் கொண்டு தற்காலிக மஸ்ஜித் நிர்மாணிக்கப்பட்டது.

தற்காலிக மஸ்ஜித் நிர்மாணிக்கும் பணி நள்ளிரவு வரை தொடர்ந்தது. ஜங்புரா எம்.எல்.ஏ தர்வீந்தர் சிங் மார்வாவின் தலைமையில் தற்காலிக மஸ்ஜிதை கட்டும் பணி நடந்தது. தற்காலிகமாக மஸ்ஜித் கட்டப்படுவதாக தகவல் போலீசாருக்கு கிடைத்த பொழுதிலும் அவர்கள் அதனை தடுக்கவில்லை. தற்காலிகமாக கட்டப்பட்டுள்ள மஸ்ஜிதில் 5 நேரமும் தொழுகை நடைபெற்று வருகிறது.

மஸ்ஜிதை மீண்டும் கட்டுவதற்காக மணலும், செங்கற்களும் இடிக்கப்பட்ட இடத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன. காலம் தாழ்த்தாமல் நிரந்தர மஸ்ஜித் கட்டப்படும் என முஸ்லிம் தலைவர்கள் தெரிவித்தனர்.

மஸ்ஜிதில் தொழுகை நடத்துவதை தடுக்க வேண்டாம் என டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆனாலும், மோதல் சூழலை கவனத்தில்கொண்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு சம்பவ இடத்தில் போடப்பட்டுள்ளது. மஸ்ஜிதை இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றும் போராட்டம் நடைபெற்றது. இருந்தபோதிலும், மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் தொழுகை நடத்த அனுமதி வழங்கியதும், மீண்டும் மஸ்ஜித் புனரமைக்கப்படும் எனவும் முதல்வர் ஷீலா தீட்ஷித் வாக்குறுதியளித்ததைத் தொடர்ந்து மக்களிடையே கொந்தளிப்பு குறைந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜும்ஆ தொழுகையில் கலந்துக் கொண்ட முஸ்லிம்களுக்கு அப்பகுதியில் அமைந்துள்ள கோயிலில் சுத்தம்(ஒழு) செய்ய ஹிந்து சமூக மக்கள் வசதிச் செய்துக் கொடுத்தது குறிப்பிடத்தக்கதாகும்.

செய்தி:தேஜஸ்

Related

சென்னையில் மஸ்ஜிதைத் தகர்க்க முயற்சி! முஸ்லிம்கள் முறியடிப்பு!!

சென்னையில் உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள 7 வருட பாரம்பரியமுள்ள ஒரு மஸ்ஜிதை தேசவிரோத குண்டர்கள் சிலர் இன்று தகர்க்க முயற்சி செய்தனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைச் சார்ந்தவர்கள் உடனடியாக ...

அப்துல் கலீம் பேசுகிறார்

#feature-wrapper, #carousel_control, #featured_posts { display: none; padding: 0pt; margin: 0pt; }.post { margin: 0pt 0pt 15px; padding: 15px; background: url("https://blogger.googleu...

கேரளாவில் மஸ்ஜிதை கட்டும் ஹிந்து சமுதாய வர்த்தகர்

சமுதாய நல்லிணக்கம் அதிகரிப்பதற்காக கத்தரை தலைமையிடமாக் கொண்டு செயல்படும் ஹிந்து சமுதாயத்தைச் சார்ந்த வர்த்தகரான சி.கே.மேனன் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மஸ்ஜித் ஒன்றை கட்டவிருக்கிறார். 1200 ஆண்டுகளு...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Hot NewsRecentArchive

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item