சென்னையில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முதல் மாநில மாநாடு

"மாணவர் சமூகமே விழித்தெழு! புதியதொரு சகாப்தம் படைப்போம்!" என்ற முழக்கத்துடன் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற மாணவர் அமைப்பின் தமிழக மாநில மாநாடு வருகிற 23-ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. மாநாட்டையொட்டி கண்காட்சி, ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் பேரணி, பொதுக்கூட்டம் ஆகியன நடத்தப்படும் என கேம்பஸ் ஃப்ரண்டின் தமிழ்நாடு மாநில தலைவர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர். இம்மாநாட்டில் பிரபல தலைவர்கள் பங்கேற்கின்றார்கள்.

மாணவர் சமூகம் தேசத்தின் முன்னேற்றத்திற்கான பாதையில் ஒதுக்கித்தள்ள முடியாத சக்தியாகும். சமூக மாற்றத்திலும், தேசத்தின் வளர்ச்சியிலும் உறுதிப்பூண்டு மாணவர்களை வழி நடத்தவேண்டும் என்பதுதான் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் லட்சியம் என தலைவர்கள் தெரிவித்தனர்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மாநிலத் தலைவர் எ.ஷாஹுல் ஹமீத், துணைத் தலைவர் எ.முஹம்மது அன்வர் ஆகியோர் பங்கேற்றனர்.

Related

SDPI 7058299676966551293

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item