குஜராத் சங்க்பரிவார தலைவர்கள் விசாரணையின் நிழலில்

இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் சங்க்பரிவார் தலைவர்களின் பங்கினைக் குறித்து மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்டுள்ள சுவாமி அஸிமானந்தா அளித்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் குஜராத் மாநிலத்தில் முன்னாள் பா.ஜ.கவின் பொதுச் செயலாளர் ஜெயந்தி கேவாத் உள்பட மூத்த ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, வி.ஹெச்.பி தலைவர்கள் விசாரணையின் நிழலில் உள்ளனர்.

புலானாய்வுக் குழு இத்தலைவர்களில் சிலரை விசாரிக்கும் என தெரிகிறது. இதனால் அஸிமானந்தாவுடன் தொடர்புடைய சங்க்பரிவார தலைவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

மலேகான் குண்டுவெடிப்புக் குற்றவாளி ஹிந்துத்துவா பெண் தீவிரவாதி பிரக்யாசிங் தாக்கூரை கடந்த 2003 ஆம் ஆண்டு தனக்கு ஜெயந்தி கேவாத் அறிமுகம் செய்துவைத்தார் என அஸிமானந்தா வாக்குமூலம் அளித்திருந்தார்.

குண்டுவெடிப்புகளுக்கு சதித்திட்டம் தீட்டப்பட்ட அஸிமானந்தாவின் சபரிதாம் ஆசிரமத்தின் நிர்வாகியாகவும் கேவாத் இருந்துள்ளார். பிரக்யாசிங்கை கேவாத் அஸிமானந்தாவுக்கு அறிமுகப்படுத்தி இரண்டு மாதங்கள் கழித்து கேவாத் அழைத்ததன்பேரில் அவருடைய நவ்ஸாரி என்ற இடத்திலுள்ள வீட்டிற்கு சென்ற அஸிமானந்தா அங்கு பிரக்யாசிங் இருப்பதைக் கண்டார்.

இதனைத் தொடர்ந்து இருவருக்குமிடையேயான உறவு வளர்ந்தது என அஸிமான்ந்தா வாக்குமூலத்தில் கூறியிருந்தார். ஆனால், தனக்கு பிரக்யாசிங்கை தெரியுமே தவிர அவருடன் எவ்வித உறவுமில்லை என கேவாத் கூறுகிறார்.

"நான் பா.ஜ.கவின் பொதுச்செயலாளராக இருந்த வேளையில் சூரத் ரெயில்வே நிலையத்தில் வைத்து பிரக்யாவை சந்தித்தேன். மற்றவர்களைப்போல் என்னை வரவேற்க வந்திருந்தார் அவர். அன்று அவர் காவி உடை அணிந்திருக்கவில்லை, மாறாக ஜீன்ஸ் பேண்டும், டீ சர்ட்டும் அணிந்திருந்தார். 10 நிமிடங்கள் மட்டுமே நான் அவருடன் பேசினேன். நான் பிரக்யாவை அஸிமானந்தாவுக்கு அறிமுகப்படுத்தவேயில்லை." இவ்வாறு கேவாத் கூறுகிறார்.

தாங்க் பா.ஜ.க எம்.எல்.ஏ விஜய் பட்டேல் விசாரணையின் நிழலில் உள்ள மற்றொரு நபர். சபரி கும்ப சமிதியில் உறுப்பினரான பட்டேலுக்கு கடந்த சட்டமன்றத் தேர்தலில் சீட் கிடைத்ததற்கு காரணம் குஜராத் முதல்வர் மோடிக்கு மிக நெருக்கமான அஸிமானந்தாவின் நிர்பந்தத்தின் மூலமாகத்தான் என கருதப்படுகிறது.

அஸிமானந்தாவின் கைதிற்கு பிறகு பட்டேலைக் குறித்த செய்தி ஊடகங்களில் இடம்பெறவில்லை. வி.ஹெச்.பி, ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள் ஆகிய பல்வேறு ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கங்களின் தலைவர்கள் அஸிமானந்தாவுடன் நிரந்தர தொடர்பிலிருந்தனர் என்பதை புலானாய்வு ஏஜன்சிகளுக்கு தெரியவந்துள்ளது. இவர்களில் பலரும் தற்பொழுது தலைமறைவாகியுள்ளனர்.


செய்தி:தேஜஸ்

Related

VHP 9043761681075867323

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item