தீரமிக்க மனித உரிமைப் போராளியை இழந்துவிட்டோம் - NCHRO


எவருக்கு முன்பும் மண்டியிடாத தீரமிக்க மனித உரிமைப் போராளியை கெ.ஜி.கண்ணபிரானின் மரணத்தின் மூலம் நாம் இழந்துவிட்டோம் என மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பான NCHRO பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கெ.வி.முஹம்மது ஷெரீஃப் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

எவருடைய முகத்தை நோக்காமலும், பாரபட்சமற்ற முறையில் மனித உரிமை பிரச்சனைகளை அணுகிய கண்ணபிரான் மனித உரிமைகளை மீறுபவர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்.

அப்துந்நாஸர் மஃதனி உள்பட கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்ட அல் உம்மா இயக்கத்தினருக்காக ஒரு கட்டத்தில் ஆஜராகி வாதாடினார் அவர்.

போலி என்கவுண்டர் கொலைகளுக்கு எதிராக வலுவாக போராடிய அவர் தனது வாழ்க்கையையே மனித உரிமை போராட்டங்களுக்காக ஒதுக்கிவைத்தார்.

கண்ணபிரானின் வாழ்க்கையும்,பணிகளும் மனித உரிமை களத்தில் பணியாற்றுபவர்களுக்கு முன்மாதிரியாகும். இவ்வாறு கெ.வி.முஹம்மது ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.

பாலைவனதூது - Koothanallur Muslims

Related

SDPI 6646208612387551654

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item