ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி

மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்ட லெஃப்டினண்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித் உள்பட ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது.

ஜாமீன் வழங்கப்பட்டால் இவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதனை சுட்டிக்காட்டிய நீதிமன்றம் இதர குற்றவாளிகளான ராகேஷ் டவாடே, அஜய் ரஹிர்கர் ஆகியோரின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடிச் செய்தது.

மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்டவர்கள் இந்திய அரசை கவிழ்த்துவிட்டு ஹிந்துராஷ்ட்ரம் உருவாக்குவதற்கான செயல்களில் ஈடுபட்டவர்கள் எனவும், இதற்காக அபினவ் பாரத் என்ற அமைப்பை உருவாக்கியதாகவும் அரசு தரப்பு வாதிட்டது.

தாங்கள் நிரபராதிகள் எனவும், குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்ட சூழலில் தங்களின் சிறைக்காவல் தேவையற்றது எனவும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இவ்வழக்கின் மற்றொரு குற்றவாளியும் ஹிந்துத்துவ பெண் தீவிரவாதியுமான பிரக்யா சிங் தாக்கூரின் ஜாமீன் மனுவை வருகிற ஜனவரி 10 ஆம் தேதி நீதிமன்றம் பரிசீலிக்கும்.

கடந்த 2008 ஆம் ஆண்டு ஆறு பேரின் மரணத்திற்கு காரணமான மலேகான் குண்டுவெடிப்பில் ஏழு ஹிந்துத்துவா பயங்கரவாதிகளை மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ் கைதுச் செய்திருந்தது.

செய்தி:தேஜஸ் - பாலைவனதூது
KOOTHANALLUR

Related

RSS 1687690232110903153

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item