டாக்டர் பினாயக் சென்னை விடுதலைச் செய்யக்கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஆர்ப்பாட்டம்

மருத்துவரும் மனித உரிமைப் போராளியுமான டாக்டர் பினாயக் சென்னை விடுதலைச் செய்யக்கோரி பெங்களூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துக்கொண்டு தங்களது கண்டனங்களை வெளிப்படுத்தினர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனம்

டாக்டர் பினாயக் சென் மீது தேசத் துரோகக் குற்றம் சுமத்தி ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

ராய்ப்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்நாட்டின் நீதிபீடத்தின் புனிதத் தன்மையின் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

பரந்த நோக்கில்,நீதிமன்றத்தின் பிறழ்வான கருத்துக்கள் எதிர்காலத்தில் மனித உரிமை ஆர்வலர்களுக்கும், அமைப்புகளுக்கும் அபாயத்தை ஏற்படுத்தக் கூடியவையாகும். இந்த தீர்ப்பு, நீதிமன்றம் உண்மையிலேயே சுதந்திரமாக செயல்படுகிறதா? அல்லது ஆட்சியாளர்களின் நிர்பந்தம் மற்றும் செல்வாக்கின் அடிப்படையில் செயல்படுகிறதா? என்பதுக் குறித்து வலுவான சந்தேகத்தை எங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர் பினாயக்சென் விருதுப் பெற்ற குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் மனித உரிமை ஆர்வலராவார். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததிலிருந்து ஆட்சியாளர்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் பழங்குடி மக்களுக்கு சேவை புரிய தனது வாழ்வை அர்ப்பணித்தவர். சமூகத்தின் முன்னேற்றத்திற்கு உழைத்த பினாயக் சென்னின் கடமையுணர்விற்கு ஆயுள்தண்டனையும், தேசத் துரோகமும் பரிசாக கிடைத்துள்ளது உண்மையிலேயே பரிதாபகரமானதாகும்.

ஆனால், பலகோடிகளை ஊழல் புரிந்த அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கத்தினரும் சட்டத்தின் பிடியிலிருந்து பாதுகாப்புப் பெற்று சுதந்திரமாக சுற்றித் திரியும்பொழுது மனித உரிமை ஆர்வலர் டாக்டர் பினாயக் சென் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

பொதுசமூகம் பினாயக் சென்னிற்கு ஆதரவளிக்க முன்வந்து அவருக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதிக்கு எதிராக போராட வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அழைப்பு விடுக்கிறது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மனித உரிமை ஆர்வலர்களுடனும், அமைப்புகளுடனும் இணைந்து டாக்டர் பினாயக் சென்னிற்கு நீதிக்கிடைக்க போராடும் என உறுதியாக தெரிவித்துக் கொள்கிறது. என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular Front of India - Koothanallur

Related

SDPI 6916112110328959007

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item