நீதிமன்றம் விடுதலைச் செய்தபொழுதும் தொடர்ந்து வேட்டையாடப்படும் முஸ்லிம் இளைஞர்கள்

ஹைதராபாத்:மக்கா மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பின் உண்மையான குற்றவாளிகள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் தான் என்பதை சி.பி.ஐ கண்டறிந்துள்ளது.

ஆனாலும் 2007 ஆம் ஆண்டு நடந்த மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பிலும், பின்னர் நடந்த இரட்டைக் குண்டுவெடிப்பிலும் அநியாயமாக கைதுச்செய்யப்பட்டு நீதிமன்றத்தால் குற்றமற்றவர்கள் என விடுதலைச் செய்யப்பட்ட 18 முஸ்லிம் இளைஞர்கள் மீதான தீவிரவாத முத்திரை மட்டும் போகவில்லை.

மாறாக அவர்கள் தொடர்ந்து ஊடகங்களாலும், சமூகத்தாலும் வேட்டையாடப்படுகின்றனர். 6 மாத காலம் சிறைவாசமும் சித்திரவதையும் அனுபவித்த இந்த இளைஞர்களை மீண்டும் குற்றவாளிகளாக சித்தரிப்பதில் ஊடகங்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

கடந்த வாரம் போலீஸ்காரர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார். மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பிற்கு பழிவாங்கும் நடவடிக்கை இது என போலீஸ் தரப்பு கூறுகிறது.

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு வெடிப்பொருட்களை ஏற்பாடுச் செய்துக்கொடுத்தார்கள் என்பது கைதுச்செய்த 18 முஸ்லிம் இளைஞர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

ஆனால் குண்டுவெடிப்பு வழக்கிற்கு பகரமாக சதித்தீட்டம் தீட்டியதாக வழக்கு தொடரப்பட்டது. சட்டத்திற்கு புறம்பாக 5 முதல் 12 தினங்கள் கஸ்டடியில் வைத்துவிட்டுத்தான் போலீஸ் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. பின்னர் நீதிமன்றம் இவர்களை குற்றமற்றவர்கள் என விடுதலைச் செய்தது.

தங்களுக்கு ஏற்பட்ட துயர்களைக் குறித்து வெளியேக் கூறக்கூட பயப்படும் அளவுக்கு இவர்கள் போலீஸாரால் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். ஆனால் வற்புறுத்தலுக்கு பின்னர் 18 முஸ்லிம் இளைஞர்களில் அப்துல் கரீம், அப்துல் காதர் ஆகிய இருவர் தங்களுக்கு ஏற்பட்ட இன்னல்களைக் குறித்து பேச துவங்கியுள்ளனர்.

தங்களுக்கு போலீஸாரால் ஏற்பட்ட சித்திரவதைகளையும், அவமானத்தையும் மறக்க முடியாவிட்டாலும், ஊடகங்களின் நடவடிக்கைகள் வெந்தப்புண்ணில் வேல் பாய்ச்சுவதற்கு சமமாகும் என அவர்களிருவரும் கூறுகின்றனர்.

போலீஸ் கான்ஸ்டபிள் சுடப்பட்டுக் கொல்லப்பட்ட பொழுது சில ஊடகங்கள் இவர்களை விடுதலைச் செய்ததை மீண்டும் நினைவுக்கூறின. சில காட்சி ஊடகங்கள் கான்ஸ்டபிள் இறந்த செய்தியைக் கூறும்பொழுது இவர்கள் நீதிமன்றத்திலிருந்து விடுதலையாகி இறங்கிவரும் காட்சியை காண்பித்துள்ளன.

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டதன் விளைவாக இவர்களின் வாழ்க்கையே தகர்ந்து போனது. பலருக்கு வாடகை வீட்டிலிருந்து வெளியேறவேண்டிய சூழல் ஏற்பட்டது. சிலரின் சகோதரிகளின் திருமணம் முடங்கியது. எவரும் இவர்களை தொலைபேசியில் அழைப்பதுமில்லை. இவர்கள் அழைத்தாலும் பதில் கொடுப்பதுமில்லை. சமூக ரீதியான நிகழ்ச்சிகளிலும், திருமண வைபவங்களிலும் இவர்கள் அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்படுகின்றார்கள்.

'சமூகத்திலிருந்து தாங்கள் புறக்கணிக்கப்பட நாங்கள் என்ன தவறைச் செய்தோம்?' என அவ்விரு இளைஞர்களும் வேதனையோடு கேட்கிறார்கள்.

'நீதிமன்றம் எங்களை குற்றமற்றவர்கள் என விடுதலை செய்த பொழுதிலும் சமூகம் எங்களை வேட்டையாடுகிறது என ஆட்டோரிக்‌ஷா ஓட்டி வாழ்க்கை நடத்தும் அப்துல்காதர் கூறுகிறார்.

'தீவிரவாத தாக்குதல்களுக்கு பின்னணியில் ஹிந்துத்துவாதிகளுக்கு பங்குண்டு என கண்டறிந்த கொல்லப்பட்ட முன்னாள் ஏ.டி.எஸ் தலைவர் ஹேமந்த் கர்காரேக்கு நன்றிக்கூற கடமைப்பட்டுள்ளோம்' என இருவரும் கூறினர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
koothanallur muslims

Related

ஆதாரம் சேகரிப்பு என்ற பெயரில் நாடகமாடி அப்துல் நாஸர் மஃதனியை அலைக்கழிக்கும் கர்நாடக போலீஸ்

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள கேரள மாநில பி.டி.பி கட்சித் தலைவர் அப்துல் நாஸர் மஃதனியை கைதுச் செய்த கர்நாடகா போலீஸ், பின்னர் அவரை நேற்று குடகு என்ற இடத்தில் ரகசிய ...

நோன்பாளிகளான சிறைக்கைதிகளை கொடூரமாக தாக்கிய போலீஸ்

புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்றிருந்த முஸ்லிம் சிறைக்கைதிகளை போலீசார் கொடூரமாக தாக்கியுள்ளனர்.போபால் மாவட்ட கோர்ட் வளாகத்திலிருக்கும் சப்-ஜெயிலில் இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்துள்ளது.நோன்பு...

கேரளாவில் போலீஸ் தலைமையகம் சித்திரவதைக் கூடங்களாக செயல்படுவதாக பிரபல நாளிதழ் செய்தி வெளியீடு

கொடூரமான சித்திரவதைகளை ரகசியமாக செய்யவும், சட்டத்தின் பார்வையில் இருந்து தப்பிக்கவும் எர்ணாகுளத்தில் போலீஸ் தலைமையகம் சித்திரவதைக் கூடங்களாக வேலை செய்கின்றன.காவல்துறையினர் ஆழுவா, மூவாட்டுப் புழா மற...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Hot NewsRecentArchive

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item