ஒபாமா ஒரு கடைசி வாய்ப்பு: அஹ்மத் நிஜாத்
http://koothanallurmuslims.blogspot.com/2010/05/blog-post_369.html
டெஹ்ரான்:தன் உருவத்தை காப்பாற்றிக் கொள்ளவும் உண்மையான மாற்றங்களை கொண்டுவரவும், யு.எஸ் அதிபர் 'ஒபாமா தான் உலகத்திற்கே அமெரிக்காவின் கடைசி நம்பிக்கை' என்று ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத் கூறியுள்ளார்.
நியூயார்க் டைம்ஸிற்க்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது; 'அழிந்து போயுள்ள அமெரிக்காவின் பெயரை திரும்ப புதுப்பிப்பதற்கு ஒபாமா தான் சிறந்த மனிதர் என்றார். இந்த வாய்ப்பை யு.எஸ் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். ஏனென்றால் இது போன்ற மற்றொரு வாய்ப்பு அமெரிக்காவிற்கு கிடைக்கப் பெறாது' என்று அவர் மேலும் தெரிவித்தார்.
'என்.பி.டி. உடன்படிக்கை விவகாரத்தில் பெரும்பாலான நாடுகள் சந்தோசமாக இல்லை ஆதலால் அவ்வுடன்படிக்கையில் திருத்தம் கொண்டுவருவதில் அந்நாடுகள் கூச்சப்படக் கூடாது' என்று அவர் மேலும் கூறினார்.
'அதில் முக்கிய பிரச்சனை என்னவெனில் - யார் அணுஆயுதத்தை பயன்படுத்தி குண்டுகளும் ஆயுதங்களும் தயாரிக்கின்றார்களோ; அவர்களை விட்டுவிட்டு அணுஆயுதத்தை அமைதி முயற்சிக்காக பயன்படுத்தும் நாடுகளை என்.பி.டியின் ஐ.ஏ.இ.ஏ துன்புறுத்துவது போன்ற வடிவத்தினை மாற்றி அமைக்க வேண்டும்' என்றார்.
'ஐ.ஏ.இ.ஏ என்ற ஆணையத்தில் யார் உண்மைக்காக போராடுகின்றார்களோ அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர் - ஆனால் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு உலக அளவில் ஆதரவு கூடுகின்றது.
இதை எல்லாம் கருதித் தான், என்.பி.டி உடன்படிக்கையில் திருத்தம் கொண்டுவருவது மிக அவசியமும் தவிர்க்க முடியாததும் கூட!' என்று தன் பேட்டியினை முடித்தார் அஹ்மத் நிஜாத்.
source:Siasat
நன்றி : பாலைவனதூது
koothanallur muslims
நன்றி : பாலைவனதூது
koothanallur muslims