அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு 2 இந்து தீவிரவாதிகள் கைது


அஜ்மீர்: ஆஜ்மீர் தர்காவில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக ஆஸ்எஸ்எஸ் மற்றும் பெண் தீவிரவாதி பிரஞ்யா தாகூருடன் தொடர்புடைய இரு இந்து தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்காவுக்குள் கடந்த 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் குண்டு வெடித்தது. இதில் 3 பேர் பலியாயினர்.

இந்த சம்பவத்தை ராஜஸ்தான் மாநில தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர்.

சம்பவ இடத்தில் கிடைத்த சிம்கார்டு மூலம், `அபினவ் பாரத் சங்கடன்' என்ற இந்து தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய தேவேந்திர குப்தா என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

ஜார்கண்ட் மாநிலத்தில் பதுங்கியிருந்த குப்தா நோய்வாய்ப்பட்ட தன் தாயாரை பார்க்க புதன்கிழமை அஜ்மீருக்கு வந்தார். அவது நடமாட்டத்தைக் கண்காணித்து வந்த போலீசார் அவரைக் கைது செய்தனர்.

அவரை 12 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இவரிடம் நடத்திய விசாரணையி்ன் அடிப்படையில் இந்த குண்டுவெடிப்பில் இன்னொரு முக்கிய குற்றவாளியான சந்திரசேகர் பரோட் என்பவரும் நேற்றிரவு பிடிபட்டார். ராஜஸ்தான் மாநிலம் சாஜாபூர் அருகே ஒரு கிராமத்தில் வைத்து இவரை தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீசார் பிடித்தனர்.

இந்த இருவருக்கும் மராட்டிய மாநிலம் மாலேகான் குண்டு வெடிப்பில் கைதான பெண் சாமியார் பிரஞ்யா சிங் தாக்குருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் தேவேந்தர் குப்தா தீவிரமான ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்று ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் சாந்தி தாரிவால் தெரிவித்துள்ளார்.

இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Thanks : Thatstamil
www.koothanallurmuslims.com

Related

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் R.S.S-ன் தலைவருடனான தொடர்பை வெளியிட்ட தொலைக்காட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல்

டெல்லி:ஹெட்லைன்ஸ் டுடே மற்றும் ஆஜ் தக் தொலைகாட்சி அலுவலகம் மீது டெல்லியில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் ஆர்.எஸ்.எஸ். தலைவ...

தொண்டி அருகே 2 நாளாக கலவரம் - இரு பிரிவினரிடையே மோதல் - 500 பேர்கள் மீது வழக்கு

திருவாடானை, ஜூலை 12: திருவாடானை தாலுகா, தொண்டி அருகே நம்புதாளையில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 9 பேர் காயமடைந்தனர். இந்த மோதல் தொடர்பாக 500-க்கும் மேற்பட்டோர் மீது போலிசார் வழக்குப் பதிவு செய்...

ராமர் கோயில் குறித்த விழிப்புணர்வு மூலம் ஹிந்துத்துவாவுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்க ஆர்.எஸ்.எஸ். திட்டம்

புதுடெல்லி:ராமர் கோயில் விஷயத்தை கொண்டு எல்லா உள்ளமைப்புகள் மூலம் மீண்டும் அச்சுறுத்தவும்,நாட்டில் ஹிந்துத்துவா தீவிரவாதத்திற்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தவும் தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்., தீர்...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Hot NewsRecentArchive

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item