குஜராத் கலவர வழக்கு-விசாரணைக் குழு முன் இந்து தீவிரவாதி பிரவின் தொகாடியா ஒரு வழியாய் ஆஜர்
http://koothanallurmuslims.blogspot.com/2010/05/blog-post_2304.html
காந்திநகர்: குஜராத் கலவர வழக்கில் விஸ்வ இந்து பரிஷத் சர்வதேசத் தலைவர் பிரவீன் தொகாடியா இன்று சிறப்பு விசாரணைக் குழு முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
உச்ச நீதிமன்றம் அமைத்த இந்தக் குழு கடந்த மாதம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை இரவு பகலாக விசாரித்து வாக்குமூலம் பெற்றது.
இதையடுத்து இந்தக் கலவரத்தை தூண்டிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட தொகாடியாக்கும் கடந்த மாதம் 3ம் தேதி நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால், சுற்றுப் பயணத்தில் இருப்பதாகக் கூறி தொகாடியா ஆஜராகவில்லை.
இந் நிலையில் தொகாடியாவின் வழக்கறிஞர் சிறப்பு விசாரணைக் குழுவின் அலுவலகத்துக்குச் சென்று என்னென்ன கேள்விகள் கேட்கப் போகிறீ்ர்கள் என்று கேட்டு தகராறு செய்தார். அவரை அதிகாரிகள் எச்சரித்து வெளியே அனுப்பினர்.
இதையடுத்து வெளியே வந்த அவர் விசாரணைக் குழுவினர் தன்னை அவமானப்படுத்தி வெளியே அனுப்பியதாக குற்றம் சாட்டினார்.
இந் நிலையில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசிய தொகாடியா, நான் ஒரு இந்து என்பதால் எனக்கு சிறப்பு விசாரணைக் குழு குறி வைத்துள்ளது. இருந்தாலும் நாளை நான் அவர்களது விசாரணைக்கு ஆஜராவேன் என்றார்.
இந் நிலையில் இன்று காலை அவர் தனது ஆதரவாளர்களுடன் விசாரணை அலுவலரகத்துக்கு வந்தார். அவரை மட்டும் உள்ளே அழைத்து விசாரணை நடந்து கொண்டுள்ளது.
Source : Thatstamil
koothanallur muslims