நபி(ஸல்...) அவர்களை கார்ட்டூன் வரைந்து அவமதித்தவனுக்கு அடி
ஸ்டாக்ஹோம்: வடக்கு ஸ்டாக் ஹோமில் உப்சலா பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த நபி(ஸல்...) அவர்களை கார்ட்டூன் வரைந்து அவமதித்த ஸ்வீடன் நாட்டு கார்ட்டூனிஸ்ட் லார்ஸ் வில்க்ஸின் மீது தாக்குதல் நடந்தது. உரையை அரங்கின் முன் வரிசையில் கேட்டுக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் ஆவேசமாக மேடையில் ஏறி வில்க்ஸை தாக்கினார். இதில் வில்க்ஸின் தலையில் காயமேற்பட்டு கண்ணில் அணிந்திருந்த கண்ணாடி உடைந்தது. வில்க்ஸ் உரை நிகழ்த்த வந்தபொழுதே 20 க்கும் மேற்பட்டோர் அவருக்கெதிராக கோஷம் போட்டபொழுது போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். தொடர்ந்து உரையை துவங்கியபொழுது ஐந்துபேர் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி அரங்கில் உரையின் ஒரு பகுதியாக திரையிடவிருந்த ஃபிலிமை சேதப்படுத்தினர். இதனால் போலீசார் கண்ணீர் புகையை பயன்படுத்தி அவர்களை மேடையிலிருந்து அகற்றினர். மீண்டும் உரை துவங்கியபொழுது தான் தாக்குதல் நடைபெற்றது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை போலீசார் கைதுச் செய்தனர். வில்க்ஸை தாக்கியபொழுது ஒரு முஸ்லிம் பெண்மணி 'அல்லாஹ் அக்பர்' என்று முழக்கமிட்டது குறிப்பிடத்தக்கது. ஸ்வீடன் ஊடகங்கள் இதுக்குறித்து தெரிவிக்கையில் வில்க்ஸ் திரையிட்ட ஃபிலிமில் ஆபாசமான மற்றும் மதம் சார்ந்த காட்சிகள் இருந்ததால் தான் மக்கள் ஆவேசமடைந்தனர் எனக் கூறுகின்றன. 2007 ஆம் ஆண்டு ஸ்வீடன் நாட்டு பத்திரிகையான நெரிகேஸ் அலஹண்டாவில் (Nerikes Allehanda) முஸ்லிம்களின் உயிரினும் மேலான அல்லாஹ்வின் இறுதித்தூதர் அவர்களை அவமதிக்கும் விதமாக கார்ட்டூன் வரைந்ததோடு வில்க்ஸ் உலக முஸ்லிம்களின் கோபத்திற்காரணமானதால் வில்க்ஸை கொல்பவர்களுக்கு லட்சம் டாலரும், அலஹண்டா பத்திரிகையின் எடிட்டரை கொல்பவர்களுக்கு 50 ஆயிரம் டாலரும் பரிசுத்தொகையாக அல்காயிதா அறிவித்ததாக கூறப்பட்டது.
koothanallur muslims