ஒபாமாவிற்கு அஹ்மதி நிஜாத் விடுத்த கடைசி பகிரங்க அழைப்பு

துபாய்:கடந்த வாரம் துருக்கியுடன் நடைபெற்ற அணுபொருள் பரிமாற்றத்தை ஏற்றுக்கொண்டு, ஈரானுடன் நட்பு பாராட்ட வாருங்கள் அல்லது நிரந்தர உறவு முறிவிற்கு தயாராகுங்கள்! என்று ஈரான் அதிபர் அஹ்மதி நிஜாத் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை கேட்டுக் கொண்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு அவர் மேலும் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 'இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வாய்ப்பு என்பது ஒபாமிற்கு தெரியும். இந்த வாய்ப்பை தவறவிட்டால் எதிர்காலத்தில் இன்னொரு வாய்ப்பு கிட்டாது! என்பதனையும் அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.

டெஹ்ரானிற்கு எதிராக களம் இறங்கிய பல அமெரிக்க தலைவருகளுக்கு மத்தியில், ஒபாமா தனித்துவர் வாய்ந்ததாக இருக்க வேண்டுமெனில், ஈரானுடன் அமெரிக்கா நல்ல உறவுகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இந்த உலகில் சிலர் இருக்கிறார்கள்! அவர்கள் ஒபாமாவை ஈரானிற்கெதிராக உசுப்பு ஏற்றிவிட்டு ஒரு முடிவில்லா முனைக்கு தள்ள முயல்கிறார்கள்! அதன் மூலம் ஈரானுடைய அமெரிக்க நட்பை முடிவுக்கு கொண்டு வர போராடுகிறார்கள் என்றார் அஹ்மதி நிஜாத்.

ஈரான் விவகாரத்தில் ரஷ்யா அடித்து வரும் பல்டிகளை அதிபர் அஹ்மத்நிஜாத் சாடினார்.ஈரான் நாட்டிற்கு ரஷ்யர்கள் தங்கள் நண்பனா அல்லது வேறு ஏதாவதா? என்பது இன்றும் எங்களுக்கு தெரியாது என்றார்.

எங்கள் நேர்மையான முயற்சிகளுக்கு ரஷ்ய தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்று நம்புகிறோம். ஈரானையும் மற்ற எதிரிகளுடன் இணைக்க வேண்டாம் என்று கேட்டுகொள்கிறோம்' என்றார்.

அணுஆயுத ஈரான் தலைவர் அலி அக்பர் கூறுகையில், 'ரஷ்யா தனது வாக்குகளை காப்பாற்ற வேண்டும் என்றார். அதிபர் அஹ்மதி நிஜாதின் கருத்துகளுக்கு இணங்க ரஷ்ய அணுகுமுறைகளில் நாங்கள் மாற்றங்களை எதிர்பார்க்கின்றோம் என்றார். ரஷ்யா போன்ற சிறந்த நாடுகளுடன் ஈரான் ஒரு உண்மையான நட்பான உறவை விரும்புவதாக அலி அக்பர் மேலும் தெரிவித்தார்.

source:siasat
koothanallur muslims

Related

Obama 7613006420425769959

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item