ஃபலஸ்தீனர்கள் மீதான தாக்குதல்களை அதிகரிக்குமாறு ஸியோனிஸ மதபோதகர் அழைப்பு
http://koothanallurmuslims.blogspot.com/2010/05/blog-post_19.html
நப்லஸ் யூதக் குடியேற்றமொன்று சிதறுண்டு போகும் நிலை தோன்றுகையில், ஃபலஸ்தீன் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை அதிகரித்து அவர்களின் உடைமைகளைச் சூறையாடுவதற்கு யூதர்கள் முன்வரவேண்டும் என்று தீவிரவாத ஸியோனிஸ மதபோதகரான யிட்சாக் ஷாபிரா மேற்குக் கரையிலுள்ள யூதக் குடியேற்றவாசிகளை நோக்கி அழைப்பு விடுத்துள்ளார்.
யூதக் குடியேற்றவாசிகளை வெளியேற்றுவதற்கான 'விலை'யைப் பலஸ்தீனர்கள் கட்டாயம் கொடுத்தாக வேண்டும் என்று ஷாபிரா குறிப்பிட்டுள்ளார்.
மேற்குக் கரையுடன் மட்டும் நிறுத்திவிடாமல், ஜெருசலம், கலீலி, நெகவ் என எங்கெல்லாம் ஃபலஸ்தீனர்கள் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுதல் வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலமாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரின் ஒத்துழைப்போடு, ஃபலஸ்தீன் பொதுமக்கள் மீது யூத ஆக்கிரமிப்பாளர்கள் கடும் தாக்குதல்களை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
koothanallur muslims
koothanallur muslims