இல்லாத ராமருக்கு கோவில் கட்டும் இயக்கத்தை மீண்டும் துவக்குகிறது வி.ஹெச்.பி
இதுத்தொடர்பான நடவடிக்கைகளை தீர்மானிப்பதற்காக வருகிற ஜூலை 12 ஆம் தேதி அயோத்தியாவில் அமைப்பின் மத்திய மானேஜிங் கமிட்டி கூடுகிறது.
ராமன் பிறந்த இடத்தில்(?) கோயில் கட்டுவதற்கான எதிர்கால நடவடிக்கைகள் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என வி.ஹெச்.பியின் மீடியா ஒருங்கிணைப்பாளர் வினோத் பன்ஸால் தெரிவித்தார்.
இரண்டு மாடி கோயில் நிர்மாணிப்பதற்கு தேவையான கட்டிடப் பொருட்கள் 60 சதவீதம் தயார் நிலையில் உள்ளதாகவும் பன்ஸால் தெரிவித்தார்.
அயோத்தியில் 18 வருடங்களுக்கு பிறகு நடைபெறவிருக்கும் இக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 1992 ஆம் ஆண்டு பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அயோத்தியில் கடைசியாக வி.ஹெச்.பியின் இத்தகையதொரு கூட்டம் நடந்தது.
பசுவதை,கங்கை,கோயில்களை அரசு கையகப்படுத்துவது உள்ளிட்ட பிரச்சனைகளும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என வி.ஹெச்.பி அமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
koothanallur muslims