உலக போராளிகள் குழு தலைவராக கருதப்படும் ஒசாமா பின்லேடன் ஈரான் நாட்டில் தங்கி இருப்பதாக ஒருதகவல்

உலகமகா போராளியாக கருதப்படும் அல்கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் ஈரானில் வாழ்ந்து வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. இவ்விஷயம் டாகுமென்ட்ரி படம் ஒன்றின் மூலம் வெளியே கசிந்துள்ளது. அமெரிக்க ஆவேசத்துடன் தேடி வரும் போராளி தலைவர் ஒசாமா. அவர் பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தானில் தங்கியிருக்கிறார் என்றெல்லாம் பரபரப்பாகச் செய்திகள் வரும்.அவர் உயிருடன் இல்லை என்று கூட செய்திகள் வந்திருக்கிறது. ஆனாலும் அவரை துரத்திப்பிடிக்கும் வேலையை மட்டும் அமெரிக்கா கைவிட்டதில்லை.

இந்நிலையில் ஒசாமா பின்லேடன் ஈரான் நாட்டில் தங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. பிரபல திரைப்பட இயக்குநர் ஆலன் பாரட் என்பவர் எடுத்திருக்கும் குறும்படம் ஒன்றின் மூலம் ஒசாமாவின் இன்றைய நிலை தெரிய வந்துள்ளது.அவர் ஈரானில் தனது மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இந்த குறும்படத்தை எடுப்பதற்காக 2003ம் ஆண்டில் இருந்து ஒசாமாவை 6 முறை சந்தித்திருக்கிறார் இயக்குநர் பாரட். அவருடைய குறும்படத் தகவலின்படி ஓசாமாவிற்கு ஈரான் புரட்சி பாதுகாப்புப் படை பாதுகாப்பு அளித்து வருகிறது என்பதும் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் அடுத்த குறி ஈரானா?

மேலே காணப் படும் செய்தியை படித்தாலே அமெரிக்கா ஈரானை தாக்குவதற்கு தக்க நேரத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதை புரிந்து கொள்ளலாம். அமெரிக்கா பிரிட்டன் பிரான்ஸ் போன்ற நாடுகள் ஈரானை இரண்டு விசயங்களில் அதிகமான அழுத்தங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறது அதில் ஒன்று ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது இரண்டாவது ஈரானில் உள்ள புரட்சிப்படை இந்த படை இந்தப் படை ஈரானின் மார்கத் தலைவரின் நேரடி கட்டுப் பாட்டில் உள்ளது .இந்தப் படையை எப்படியாவது ஒடுக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் எண்ணம். எனேற்றால் அமெரிக்காவிற்கு எதிராக போர் என்று ஆரம்பித்தால் எப்படியும் புரட்சிப்படையின் எதிர் தாக்குதல் அதிகமாக இருக்கும் என்பது அமெரிக்கா நன்கு உணர்ந்து உள்ள காரனத்தால் புரட்சிப் படையை பல விதமான பொய்யான தகவல்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் பத்திரிக்கைகளில் செய்தியாக வெளியிட்டு வருகின்றனர்.

எனேற்றால் புரட்சிப் படை மற்ற போராளி இயக்கங்களை போல சிறிய ரக ஆயுதங்களை கையாளுபவை அல்ல. மாறாக அனைத்துவிதமான புதிய தொழில் நுட்பங்களையும் கையாளும் இலட்சக்கணக்கான வீரர்களை கொண்ட ஈரானின் மைய அரசின் அனுமதியுடன் இயங்கும் படை அந்தவகையில் ஈரானுக்கெதிராக போர் தொடுக்க அமெரிக்கா ஆயத்தமாவதை உணர்துகிறது இந்த செய்தி.

இதற்க்கு முன் இதே காரணத்தை கூறி ஒசாமா பின்லேடனை ஒடுக்குகிறேன் என்று கூறி இன்று வரையில் இலட்சக்கணக்கான ஆப்கான் மக்களை கொன்று குவித்து வருகிறது அமெரிக்கா.மேலும் இரசாயன ஆயுதங்களை ஈராக் தயாரிக்கிறது என்று பொய்யான தகவல்களை கூறி அங்கும் இலட்சக் கணக்கான மக்களை கொன்று குவித்து வருகிறது அமெரிக்கா.

மேலும் பாகிஸ்தான் சோமாலிய போன்ற நாடுகளின் வரிசையில் அமெரிக்காவின் அடுத்த குறி ஈரானா?

koothanallur muslims

Related

muslim country 7200446985521944076

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item