குணங்குடி ஹனிபா அவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகளுடன் சந்திப்பு
http://koothanallurmuslims.blogspot.com/2010/05/blog-post_29.html
குணங்குடி ஹனிபா அவர்கள் பாப்புலர் ஃப்ரண்டின் ஆஃப் இந்தியாவின் சென்னையில் உள்ள மாநில அலுவலகத்திற்கு 25-5-2010 அன்று வருகை தந்தார்.
முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய பாப்புலர் ஃப்ரண்ட் எடுத்த முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தார். பாப்புலர் ஃப்ரண்டின் பணிகள் மென்மேலும் வளர வாழ்த்து தெரிவித்தார். மேலும் அனைத்து தரப்பு முஸ்லிம்களிடையும் பாப்புலர் ஃப்ரண்ட் நன்மதிப்பை பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் முஹம்மது அலி ஜின்னா அவர்கள்,மாநிலப் பொதுச் செயலாளர் அஹமது பக்ருதீன் அவர்கள்,செயற்குழு உறுப்பினர்களான அன்சாரி, இப்ராஹிம்,ஷாஜகான் மற்றும் பாப்புலர் ஃப்ரண்டின் சென்னை மாவட்ட நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர்.