ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகளால் தென்காசியில் கலவரம்: முஸ்லிம் ஒருவருக்கு அரிவாள் வெட்டு

தென்காசி:தென்காசி அருகே அச்சன்புதூரில் ஏற்பட்ட கலவரத்தில் 3 பேர் காயமடைந்தனர். போலீசார் தடியடி நடத்தி கலவரகாரர்களை கலைத்தனர். தென்காசி அருகே அச்சன்புதூரில் நேற்று முன்தினம் மாடன், மாடத்தி கோயில் கொடை விழா நடந்தது. கொடை விழாவை நடத்தியவர்கள் அதே ஊரில் மற்றொரு பிரிவினர் வசிக்கும் தெரு வழியாக மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்றனர்.அவர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் அப்பகுதியில் வசிப்பவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தி அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் அவர்கள் பிரச்சனை ஏற்படுத்தி மோதியுள்ளனர். கல்வீச்சும் நடந்துள்ளது. இதில் சிலர் காயமடைந்தனர். வீடு, கடைகள் சேதமடைந்தன. பெண்கள், குழந்தைகள் அலறி அடித்துகொண்டு ஓட்டம் பிடித்தனர். ஆட்டோ ஓன்று அடித்து நொறுக்கப்பட்டது. இதையடுத்து அவ்வழியே வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதில் சித்திக் என்பவர் கல்வீச்சில் காயமடைந்தார். காஜா முகைதீன் என்பவர் அரிவாள் வெட்டில் காயமடைந்தார். இவர்கள் தென்காசி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேலும் சிலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

கலவரத்தை அடக்க போலீசார் விரைந்து சென்றனர். போலீஸ் எச்சரிக்கை செய்தும் கலவரம் செய்தவர்கள் கலைந்து செல்லாததால் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். தொடர்ந்து அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தடுக்கும் வகையில் அச்சன்புதூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நெல்லை டிஐஜி, எஸ்பி ஆகியோர் நள்ளிரவு முதல் அங்கு முகாமிட்டுள்ளனர்.

koothanallur muslims

Related

RSS 8933271474375019924

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item