தேவ்பந்த் மார்க்க அறிஞரை விமானத்திலிருந்து இறக்கி கைதுச்செய்த போலீஸ்

புதுடெல்லி: முஸ்லிமாக இருந்தால் விமானத்தில் வைத்து மொபைல் போனில் கூட பேசக்கூடாது போலும். அதுவும் தாடியும், தொப்பியும் வைத்திருந்தால் விமானத்தில் பக்கத்து இருக்கைகளில் அமர்ந்திருப்பவர்களுக்கு கிலிதான் போங்க.

டெல்லியிலிருந்து துபாய் வழியாக லண்டன் செல்லும் எமிரேட்ஸ் விமானத்தில் பயணம் செய்வதற்காக ஏறி அமர்ந்தார் உ.பி.மாநிலத்தின் பிரசித்திப் பெற்ற தேவ்பந்த் தாருல் உலூம் மதரஸாவின் மார்க்க அறிஞர் மவ்லானா நூருல் ஹுதா.

விமானம் புறப்படுவதற்கு முன்னர் இவர் தனது மொபைல் போனில் தனது ஊரிலிலுள்ள உறவினரிடம் 'ஜஹாஸ் உட்னே வாலா ஹெ, ஹம் உட்னே வாலா ஹெ' (விமானம் இப்பொழுது புறப்படப் போகிறது) என்று கூறியுள்ளார்.

இதனை அருகிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த பெண்மணி ஒருவர் 'மவ்லானா விமானம் இப்பொழுது வெடித்துச் சிதறப் போகிறது' என மொபைல் போனில் கூறியதாக விமான பணியாளர்களிடம் கூற அவர்கள் பைலட்டிடம் கூறி விமானம் புறப்படுவது நிறுத்தப்பட்டது.

போலீஸில் இவ்விபரம் தெரிவிக்கப்பட்டவுடன் அவர்கள் உடனடியாக வந்தனர், மவ்லானா நூருல் ஹுதா தான் பேசியது அவ்வாறல்ல எனக்கூறி புரியவைத்த போதிலும் 50 வயதான மவ்லானாவை தீவிரவாதி என சந்தேகமடைந்து கைதுச் செய்தனர்.

பின்னர் ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவுச் செய்து திஹார் ஜெயிலில் அடைத்துள்ளனர். பின்னர் உள்துறை அமைச்சகத்துக்கு இவ்விபரம் தெரியவந்து அவர்கள் தலையிட்டு மவ்லானா ஜாமீனில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.

லண்டனில் ஒரு இஸ்லாமிய மாநாட்டில் கலந்துக் கொள்ள செல்லவிருந்தார் மவ்லானா. இதனைக் குறித்து டெல்லி போலீஸ் கமிஷனர் ஒய்.எஸ்.தட்வால் கூறுகையில், "அப்பெண்மணிக்கு ஏற்பட்ட தவறான புரிந்துணர்வு தான் பிரச்சனைக்கு காரணம்" என்றார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
paalaivanathoothu
koothanallur muslims

Related

MUSLIMS 8454583065852943731

Post a Comment

  1. Cell Phone must be switched off & we are not allowed to talk inside the plane.
    More over some people have the habit of talking so loudly. So utne waalhe sound like bomb blast funny!

    ReplyDelete

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item