எங்கள் மீது பாயும் அமெரிக்கா இஸ்ரேலை கண்டிக்காதது ஏன்? – ஈரான் அதிபர் அகமதிநிஜாத் அதிரடி பேச்சு

.நா.: எங்கள் மீது பாயும் அமெரிக்கா அணு ஆயுதங்களைக் குவித்துக்கொண்டிருக்கும் இஸ்ரேல் நாட்டைக்கண்டிக்காதது ஏன் என்று ஈரான் அதிபர்அகமதிநிஜாத் கேட்டுள்ளார்.

.நா. சார்பில் அணு ஆயுதப் பரவல் தடுப்புஒப்பந்தம் தொடர்பான மாநாடுகூட்டப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்டு பேசிய ஈரான் அதிபருக்கும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர்ஹில்லாரி கிளிண்டனுக்கும் இடையேகடும் வாக்குவாதம் மூண்டது.

அகமதிநிஜாத் பேசுகையில், முதன் முதலில் அணுகுண்டைஉருவாக்கி அதை பயன்படுத்தியதுஅமெரிக்காதான். இன்றும் கூட அதுபெருமளவில் அணு ஆயுதங்களைகுவித்து வைத்துள்ளது. அணு ஆயுதப்பரவலை உருவாக்கியதேஅமெரிக்காதான். ஆனால் மற்ற நாடுகள்அணு ஆயுதங்களை வைத்துக் கொள்ளக்கூடாது என்று மிரட்டி வருகிறது.

ஈரான்அணு ஆயுதங்களை வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறி வரும் அமெரிக்கா, இஸ்ரேல் மீது கவனம் செலுத்தாதது ஏன். இஸ்ரேல் அணு ஆயுதங்களைக்குவித்து வருவதை கண்டிக்காதது ஏன்.

பிற நாடுகளுக்கு எதிராக அணுஆயுதங்களை வைத்து மிரட்டுவதோடு, பயன்படுத்தவும் தயங்காத அமெரிக்கா, தொடர்ந்து ஈரானை மட்டும் சாடி வருவது வருத்தத்திற்குரியது என்றார்.

பின்னர் பேசிய ஹில்லாரி கிளிண்டன், அகமதிநிஜாத்தின் பேச்சு எதிர்பார்த்த ஒன்றுதான், வியப்பளிப்பதாக இல்லை என்றார்.


Thanks : thatstamil.com
www.koothanallurmuslims.com

Related

muslim country 4903252729181833863

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item