SSLC :82.56% பேர் தேர்ச்சி- நெல்லை மாணவி ஜாஸ்மின் முதலிடம்

தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வில் 82.56சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
நெல்லை அரசுப் பள்ளி மாணவி ஜாஸ்மின் அதிக மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்திலேயே முதவு மாணவியாக தேர்ச்சியடைந்துள்ளார்.

மாணவர்கள் 79.4 சதவீதமும், மாணவிகள் 85.5 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர். இதன்மூலம் இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகளே அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தை நெல்லை அரசுப் பள்ளி மாணவி ஜாஸ்மின் பெற்றுள்ளார்.

4 பேர் இரண்டாம் இடம்:
செங்கல்பட்டைச் சேர்ந்த பிரியங்கா, கூடலூரைச் சேர்ந்த நிவேதா, புதுச்சேரியைச் சேர்ந்த தமிழரசன், கரூரைச் சேர்ந்த சிவப்பிரியா ஆகிய நான்கு பேரும் 494 மதிப்பெண்கள் எடுத்து 2வது இடத்தைப் பிடித்துள்ளனர்.

3வது இடம் பிடித்த 10 பேர்:
அதே போல மதுரை ஜெயமுருகன், நாகராஜன், தென்காசி ரம்யா, நெல்லை ஜெயலின், நாமக்கல் இந்துஜா, கரூர் ராஜ்சூர்யா, பரமக்குடி பிரதீப்குமார், திலகவதி, செய்யாறு செந்தில்குமார், புதுச்சேரி ரேவதி ஆகிய 10 பேரும் 493 மதிப்பெண்கள் எடுத்து 3வது இடத்தைப் பிடித்துள்ளனர்.

koothanallur muslims

Related

MUSLIMS 5419883771342125163

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item