மீண்டும் பொருளாதார வீழ்ச்சி: எதிர்கொள்ளத் தயார் நிலையில் இந்தியா! - ஸ்டிக்ளிட்ஸ்

டெல்லி: மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சி வரப்போவது உறுதி என்றும், அதனை எதிர்கொள்ளும் அளவுக்கு இந்தியப் பொருளாதாரம் உறுதியாக இருப்பதாகவும் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் ஜோஸப் ஸ்டிக்ளிட்ஸ் கூறியுள்ளார்.

2001ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் ஸ்டிக்ளிட்ஸ். சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

"உலக அளவில் பல்வேறு பொருளாதார பிரச்சனைகள் தலையெடுக்கத் துவங்கியுள்ளன. நிச்சயம் இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் பெரும் பிரச்சனைகளை சர்வதேச நாடுகள் எதிர்கொள்ள வேண்டி வரும்.

குறிப்பாக அமெரிக்காவில் 2010ம் ஆண்டின் இறுதியில் மீண்டும் ஒரு தேக்க நிலை உருவெடுக்கும் சூழல் உள்ளது. இதை அந்த நாடு எந்த அளவு தாக்குப் பிடிக்கப் போகிறது என்பதில் நிறையபேருக்கு சந்தேகம் உள்ளது.

ஆனால், சீனா அப்படியல்ல. அந்த நாடு எந்தவித நெருக்கடியையும் சமாளிக்கும் திறனுடைய பொருளாதார கட்டமைப்பைக் கொண்டுள்ளது. சீனா ஒரு பெரிய குமிழ் மீது உட்கார்ந்திருக்கிறது. அது எந்த நேரமும் வெடித்துவிடும் என்றுதான் மேற்கத்திய பொருளாதாரவாதிகள் சிலர் கூறிவருகிறார்கள். அது முழுக்க தவறானது.

சீனா ஒரு குமிழ் மீது அமர்ந்திருக்கவில்லை. சரியான நிலையில் வசதியாக அமர்ந்துள்ளது அந்த நாடு. எத்தகைய நெருக்கடியையும் அவர்களால் எதிர்கொள்ள முடியும்.

அந் நாட்டு ஆட்சியாளர்கள் பொருளாதாரத்தை நன்கு அறிந்தவர்களாக உள்ளனர். அமெரிக்காவின் தவறுகளைப் பார்த்து நிறைய கற்றுக் கொண்டுள்ளனர். குறிப்பாக நிதி அமைப்புகளைக் கட்டுப்படுத்துவதில் வாஷிங்டனை விட மேம்பட்ட நிலையில் உள்ளனர். வங்கி மற்றும் நிதித்துறை பெய்ஜிங்கின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த இரண்டாவது தேக்கம் ஒன்றும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. காரணம், இந்தியாவின் ரிசர்வ் வங்கி, நிதிக் கொள்கைகளை வகுப்பதிலும் செயல்படுத்துவதிலும் சிறப்பாக உள்ளது.
பொருளாதார தேக்கத்தின் முதல் கட்டத்தை வேறு எந்த நாட்டையும் விட சிறப்பாக சமாளித்துள்ள இந்தியாவுக்கு இந்த இரண்டாவது தேக்கம் பெரிய சவாலாக இருக்காது.

என்னைப் பொறுத்தவரை அமெரிக்காவின் நிதிக் கட்டுப்பாட்டு அமைப்பு, இந்திய ரிசர்வ் வங்கியைப்போல செயல்பட வேண்டும் என்றுதான் சொல்வேன்...என்று கூறியுள்ளார் ஜோஸப் ஸ்டிக்ளிட்ஸ்.

இன்னொரு பொருளாதார வீழ்ச்சியா.. ஐயோ!!

Source : Thatstamil
koothanallur muslims

Related

koothanallurmuslims 126595795788190791

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item