முஸ்லிம் சமூகத்திடமிருந்து அபகரிக்க பட்டதை திரும்பப் பெறும்வரை பாப்புலர் ஃப்ரண்டிற்கு ஓய்வில்லை- இ.அபூபக்கர்

முஸ்லிம் சமூகத்திடமிருந்து அபகரிக்கப்பட்டதை திரும்பப் பெறும்வரை பாப்புலர் ஃப்ரண்டிற்கு ஓய்வில்லை என முன்னாள் சேர்மனும் எஸ்.டி.பி. கட்சியின் தலைவருமான .அபூபக்கர் கூறினார்.

கேரள மாநிலம் ஆலுவாவில் திப்புசுல்தான் நகரில் நடைபெற்ற கேரளமாநில பாப்புலர் ஃப்ரண்டின் தலைமைத்துவ சங்கம நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தினார் அவர்.

மேலும் அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது: "30 வெள்ளிக்காசுகளுக்கு கூட சமுதாயத்தைக் காட்டிக் கொடுக்கும் தலைவர்களும், பிரச்சனைகள் ஏற்படும் பொழுது ஒருபோதும் சமுதாயத்தை பாதுகாப்பதற்கு வராதவர்களும் முஸ்லிம் சமுதாயத்தின் சாபமாவர்." என்றார்.

இந்தியாவில் ஒடுக்கப்பட்ட- தாழ்த்தப்பட்ட- சிறுபான்மை மக்களுக்கு புதிய வழியைக் காட்டிட பாப்புலர் ஃப்ரண்டால் முடிந்துள்ளது, என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசியப் பொதுச்செயலாளர் கே.எம்.ஷெரீஃப்(கர்நாடகா) உரையாற்றும் பொழுது குறிப்பிட்டார்.

முற்றிலும் பாதுகாப்பற்ற சூழலிலும், கடுமையான பட்டினியாலும் வாழும் இந்தியாவின் முஸ்லிம் சிறுபான்மையினருக்கும், இதர ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கும் புதிய எதிர்பார்ப்புகள் உருவாகிவருகின்றன என கே.எம்.ஷெரீஃப் மேலும் தெரிவித்தார். அரசியலை ரவுடிகளுக்கும், கிரிமினல்களுக்கும் விட்டுக் கொடுத்துவிட்டு நல்லவர்களெல்லாம் ஒதுங்கி நின்ற காலம் கழிந்துவிட்டது.

தேசம் மற்றும் வரலாற்றின் சூழலை மாற்றியமைக்க அரசியலை மனித நேயமிக்கவர்கள் ஏற்று எடுக்கவேண்டிய காலம் நெருங்கிவிட்டது என பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய துணைத்தலைவர் எ.சயீத் உரையாற்றினார்.

புனித குர்ஆனின் கொள்கைகளை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துபவர்களுக்கு அநீதியுடன் ஒருபோதும் சமரசம் செய்ய இயலாது என அப்துற்றஹ்மான் தாரிமி தெரிவித்தார்.

பாசிசமும், முதலாளித்துவமும் கைக்கோர்த்து கனிம வளங்களைக் கொள்ளையடிப்பதற்காக காடுகளையும், கிராமங்களையும் கைப்பற்றி ஆதிவாசிகளையும், கிராமவாசிகளையும் நகரங்களின் சேரிபகுதிகளில் அடிமைப் பணியாளர்களாக மாற்றுவதுதான் புதிய ஆக்கிரமிப்பு என பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் பி.கோயா உரை நிகழ்த்தும்பொழுது குறிப்பிட்டார்.

பாப்புலர் ஃப்ரண்டின் சேர்மன் இ.எம்.அப்துற்றஹ்மான் துவக்கி வைத்த இரண்டு நாள் நிகழ்ச்சி நேற்று மாலை நிறைவுற்றது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Related

SDPI 8310241526436386278

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item