இந்தியாவில் பயங்கரவாதத்தை வளர்க்கும் RSS - குலாம் நபி

ஆர்.எஸ்.எஸ் இந்தியாவில் பயங்கரவாதத்தை வளர்த்து வருவதாக மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங்கிற்கு பிறகு ஆர்.எஸ்.எஸ் மீது கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார் குலாம் நபி ஆசாத்.

ஜம்முவில் மகாத்மா காந்திஜியின் அறுபத்தி மூன்றாவது நினைவு தினத்தையொட்டி நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரைநிகழ்த்தினார் அவர்.

மகாத்மா காந்திஜி கொலைக்கு பின்னணியில் செயல்பட்டது ஆர்.எஸ்.எஸ்தான் என குற்றஞ்சாட்டிய ஆசாத் அவ்வியக்கத்திற்கு பல்வேறு பயங்கரவாத செயல்களில் தொடர்பிருப்பதாக தெரிவித்தார்.

இந்தியாவில் நடந்த பல்வேறு மத வன்முறைகளுடன் தொடர்புபடுத்தி ஆர்.எஸ்.எஸ்ஸின் பெயர் உச்சத்தில் கேட்கிறது.

மலேகான், மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு பங்குள்ளது என அதன் உறுப்பினர்களே தெரிவித்துள்ளனர். பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கினைக் குறித்து விசாரணை நடத்துவதற்கு பாதுகாப்பு ஏஜன்சிகளுக்கு குறைந்தது பத்துவருடமாவது ஆகும் என ஆசாத் தெரிவித்தார்.

பாதுகாப்பு ஏஜன்சிகளும், ரகசிய புலனாய்வு ஏஜன்சிகளும் மதசார்பற்றத் தன்மையை பேணிக்காப்பதுக் குறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்த ஆசாத், ஹிந்து சமூகத்தைச் சார்ந்த அதிகாரிகள்தான் பயங்கரவாத செயல்களில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கினை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தனர் என அவர் சுட்டிக்காட்டினார்.

செய்தி:மாத்யமம்

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item