அச்சத்தின் பிடியில் ஃபலஸ்தீன் அதிபர் அப்பாஸ்

ஃபலஸ்தீனில் அப்பாஸ் தலைமையிலான அரசு எகிப்தில் ஏற்பட்டுள்ள நாடுதழுவிய மக்கள் புரட்சி ஃபலஸ்தீனுக்கும் பரவி அரசியல் மாற்றங்களை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளதாக ஃபலஸ்தீனிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஃபலஸ்தீன் அதிபர் அப்பாஸ் தனது ஃபதாஹ் இயக்கத்துடனும், ஃபலஸ்தீன பாதுகாப்பு அமைப்புகளுடனும் பல தொடரான ஆலோசனை கூட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் பிரதமர் சலாம் பயாத் எகிப்தின் தாக்கங்கள் ஃபலஸ்தீனில் ஏற்படுமா என்று ஆலோசித்து வருவதாகவும் லண்டனை தளமாக கொண்டியங்கும் அல் ஹயாத் பத்திரிகை தெரிவித்துள்ளது.

விரைவாக ஃபலஸ்தீனில் ஒரு புரட்சி ஏற்பட்டு நாட்டின் பொருளாதார, உள்நாட்டு பாதுகாப்பு , உள்நாட்டு அரசியல் சமநிலை போன்றவற்றை மாற்றிவிடும் என்று ஃபலஸ்தீனிய அதிகாரிகள் அச்சம் கொண்டிருப்பதாக மேலும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

அவ்வாறு ஏற்படும் ஒரு எழுச்சி ஹமாஸ் அமைப்பு மேற்கு கரை பிரதேசத்துக்கு மீண்டும் வருவதற்கான கதவை திறந்து விடும் என்றும் மேற்கு கரையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான மோதல்களை முறியடித்து விடுமாறு கண்டிப்பான கட்டளை பிறப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
 
பாலைவனதூது

Related

Palestine 3505757113504638782

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item