எகிப்து:10 லட்சம்பேர் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி

எகிப்து நாட்டு சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டுமெனக்கோரி அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைப்பெற்று வரும் மக்கள் திரள் போராட்டம் மேலும் வலுவடைந்துள்ளது.

நாளை(01/02/2011) கெய்ரோவில் பத்துலட்சம் பேர் கலந்துக் கொள்ளும் பிரம்மாண்டபேரணிக்கு மக்கள் தயாராகி வருகின்றனர்.

அரசு நிர்வாகம் முழுவதும் ஸ்தம்பித்துபோன சூழலில் போராட்டத்தை எதிர்கொள்ளவியலாமல் ராணுவம் நெருக்கடியில் ஆழ்ந்துள்ளது. தஹ்ரீர் சதுக்கத்தை நோக்கிச் செல்லும் அனைத்து சாலைகளிலும் ராணுவம் தடையை ஏற்படுத்தியிருந்த போதிலும் ஐம்பதினாயிரம் பேர் இன்றும் தஹ்ரீர் சதுக்கத்தில் ஒன்றுகூடினர்.

ராணுவத்தினரையும், இரவு ஊரடங்கு உத்தரவையும் மக்கள் பொருட்படுத்தவேயில்லை.

இதற்கிடையே போராட்டத்தை எதிர்கொள்ளவியலாமல் கடந்த வெள்ளிக்கிழமை வெளியேறிய போலீசாரிடம் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அரசு உத்தரவிட்ட பொழுதிலும் போலீஸ் இதுவரை களமிறங்கவில்லை. பெரிய டாங்குகளுடன் ராணுவத்தினர் ரோந்து வந்தபொழுதிலும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை தடுக்க முனையவில்லை. ஹுஸ்னி முபாரக் காலம் தாழ்த்தாமல் பதவியை ராஜினாமாச் செய்யவேண்டுமென நோபல் பரிசு பெற்ற அல்பராதி வலியுறுத்தியுள்ளார்.

செய்தி:மாத்யமம்

Related

peoples 5244812339949443994

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item