பெரியபட்டினத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்
http://koothanallurmuslims.blogspot.com/2011/02/blog-post_4737.html
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம் இணைந்து இராமநாதபுரம் பெரியபட்டினத்தில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் சென்ற பிப்.12 அன்று பெரியபட்டினம் அரசு ஆரம்ப தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. முகாமை பெரியபட்டினம் ஊராட்சி மன்றத் தலைவர் அப்துல் ரஹீம் துவங்கி வைத்தார். மதியம் 2 மணி வரை நடந்த முகாமில் 168 நபர்கள் கலந்துகொண்டனர். அதில் 30 நபர்கள் இலவச அறுவை சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கலந்து கொண்ட மக்கள் அனைவரும் பயன்பெற்று பாராட்டிச் சென்றனர்.
பாலைவனதூது