ஈரானில் அரசுக்கு ஆதரவாக பிரம்மாண்ட பேரணி
http://koothanallurmuslims.blogspot.com/2011/02/blog-post_7462.html
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அரசுக்கு ஆதரவான பிரம்மாண்டப் பேரணி நேற்று ஜும்ஆ தொழுகைக்கு பிறகு நடைபெற்றது.
ஈரானில் உள்நாட்டு கலகத்திற்கு வழிவகுக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களான மீர் ஹுஸைன் மூஸாவி, மெஹ்தி கதூபி ஆகியோரை விசாரணைச் செய்ய வேண்டுமென பேரணியில் கலந்துக் கொண்டோர் வலியுறுத்தினர். இவர்கள்தாம் மக்களை கிளர்ச்சிக்கு தூண்டி விடுகின்றனர் என பேரணியில் குற்றஞ்சாட்டப்பட்டது.
வீட்டுக்காவலிருக்கும் மூஸாவிக்கும், கதூபிக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டுமென ஜும்ஆ தொழுகைக்கு தலைமை வகித்த ஆயத்துல்லாஹ் ஜன்னத்தி வலியுறுத்தினார்.
செய்தி:மாத்யமம்