மத்திய கிழக்கில் நடந்துவரும் மக்கள் போராட்டம் ஒரு பார்வை

1.துனிசியா: பின் அலி ஆட்சி அகற்றம். ஊர் அடங்கு உத்தரவு நீக்கம். அவசரகால சட்டம் நடைமுறையில். மக்கள் போராட்டத்தை தடுக்க தேசிய கவுன்சில் அமைக்கத் திட்டம். நகரங்களில் ஆளுநர்கள் மாற்றம் மற்றும் வதந்திகளை கிளப்பி குழப்பம் உண்டாக்கும் நபர்களை கைது செய்ய அல்லது சுடுவதற்கு அனுமதி.

2.எகிப்து: முபாரக் ராஜினாமா. உடல் நிலைக் கவலைக்கிடம். பொருளாதார சரிவில் எகிப்து, வங்கிகள் மூடல். வெளிவரும் பெண்களின் பிரச்சனைகள். இக்வான்களின் அரசியல் விரைவில் துவக்கம்.

3. அல்ஜீரியா: மக்கள் போராட்டம் அதிகரிப்பு. மக்களை அடக்க நினைக்கும் அரசு, அதற்கு துணைபோகும் ராணுவம் மற்றும் போலீஸ். ல் இருந்து நிலவும் அவசரகால சட்டத்தை நீக்க பிரமர் ஒப்புதல். வீடுகள், வேலைவாய்ப்பு, பசிப்பட்டினி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வுக்கான பிரதமர் வாக்குறுதி.

4.பஹ்ரைன்: ஷியாக்களின் ஆட்சிக்கெதிராக மக்களின் போராட்டங்கள் தீவிரம். போராட்டங்களில் போலிசிற்கும் மக்களுக்கும் சண்டை மூண்டது. இதுவரை நான்கிற்கும் மேற்பட்டோர் மரணம். தொடர்ந்து அரசியல் கொந்தளிப்பு. மக்களை அடக்க அமெரிக்க ராணுவம் சவூதியிலிருந்து ஹெலிகாப்டர்கள் மூலமாக வந்துதுள்ளதாக தகவல். பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. எகிப்து போராட்டத்தில் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தலைநகர் மனாமாவில் நேற்று பேரணி. கலவரம் ஏற்படும் என்பதால் வர்த்தக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவை மனாமாவில் மூடப்பட்டிருந்தன.

5.எமன்: 5 வது நாளாக தீவிர போராட்டம். துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி. அதிபர் அலி அப்துல்லா சலேவுக்கு எதிராக தலைநகர் ஸன்ஆவில் மக்கள் ஆர்ப்பாட்டம். ஆயிரக்கணக்கான பல்கலை மாணவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தலைநகர் சனாவில் உள்ள அதிபர் மாளிகை நோக்கிச் செல்லும் தெருக்களில் ஏகப்பட்ட சோதனைச் சாவடிகள் . பல இடங்களில் கம்பி வலைகள் குறுக்காக போடப்பட்டுள்ளன.

6.ஈராக்: ஆங்காங்கே மக்கள் போராட்டம். அரசு அலுவலகங்கள் தீவைத்து தகர்ப்பு. மக்கள் கோஷங்கள் அதிகரித்தவண்ணம் உள்ளது. மேற்கத்திய ராணுவம் மக்களை அடக்கும் முயற்சியில்.

7.ஈரான்: இங்கு ஒரு வித்தியாசமான நிகழ்வு. மற்ற நாடுகளில் மக்கள் முன்வந்து போராடுகிறார்கள். ஆனால் இங்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தூண்டுதலின் படி எதிர்க்கட்சி மூலம் போராட்டம். எதிர்க்கட்சி தலைவர் வீட்டுக்காவலில். திங்கட்கிழமை நடந்த போராட்டத்தில் போலிசிற்கும் போராட்டக்காரர்களுக்கும் மத்தியில் கலவரம் மூண்டது. இரண்டு பேர் கொல்லப்பட்டனர். மீடியாக்கள் ஈரான் விவகாரங்களை பெரிதாக்குகின்றது.

பாலைவனதூது 

Related

tunishiya 784665727021305977

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item