பிரவீன் தொகாடியாவின் திமிர்

விஷ்வ ஹிந்து பரிஷதின் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரவீன் தொகாடியா தாருல் உலூம் மற்றும் தப்லிக் ஜமாத்திற்க்கு எதிரான தனது நச்சுக்கருத்துக்களை வெளியிட்டுள்ளான். தாலிபான்களையும், ஜிஹாதிகளையும் உருவாக்கக்கூடிய இடமாக தாருல் உலூம் விளங்குகிறது என்றும் இந்திய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அதை இழுத்து மூடவேண்டும் என்று தனது ஆதாரமற்ற விஷக்கருத்துக்களை கக்கியுள்ளான்.


ஹனுமந்த் சக்தி ஜகரன் மஹாயக்னா தர்ம சபா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தொகாடியா, பாபரி மஸ்ஜிதை மீட்கவேண்டும் என்று தாருல் உலூம் தனது மதராஸாவில் படிக்கும் மாணவர்கள் மத்தியில் பரப்பி வருவதாகவும், தாலிபான்களையும், ஜிஹாதிய வாதிகளை உருவாக்குவதாகவும் கூறியுள்ளான். அயோத்தியில் மட்டும்மல்ல பாபர் உடைய பெயரில் இந்தியாவில் எந்த இடத்திலும் மஸ்ஜித் கட்டுவதற்க்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றான்.
ஷாவலியுல்லாஹ் அவர்கள் இந்தியாவை தாருல் இஸ்லாமாக மாற்றுவதற்க்குத்தான் தாருல் உலூமை தொடங்கினார்கள் என்றும், தப்லிக் ஜமாத் ஒரு தீவிரவாத அமைப்பு என்றும் வாந்தி எடுத்துள்ளான் தொகாடியா என்ற அறைவேக்காடு.

பல வருடங்களுக்கு முன்னால் இந்திய விமானத்தை கடத்தியவர் ஜமாத்தே இஸ்லாமிய ஹிந்த் என்ற அமைப்பை சார்ந்தவர்தான் என்றும், அவர் தேவ்பந்தினால் உருவாக்கப்பட்ட தீவிரவாதி என்ற ஒரு அறிய கண்டுபிடிப்பை தனி அறையில் வைத்து நாள் முழுக்க இருந்து ஆராய்ந்து வெளியிட்டு உள்ளான். அவன் மேலும் கூறியதாவது ராமர் கோயிலை கட்டுவதற்க்காக எத்தகைய போராட்டத்தையும் செய்யத்தயாராக இருப்பதாகவும், இந்தியாவில் இருக்கும் 35,000 மஸ்ஜித்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படும் என்று கூறியுள்ளான். இந்தியாவில் 85% சதவிகித இந்துக்கள் வாழ்வதாகவும் "ஹிந்து ராஷ்டிரா" அமைப்பதற்க்கு முஸ்லிம்களிடம் அனுமதி கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், யாருக்கெல்லாம் ஹிந்து ராஷ்டிராவில் வாழ்வதற்க்கு விருப்பம் இல்லையோ அவர்கள் தாராளமாக பாகிஸ்தானிற்க்கு செல்லலாம் என்று கூறியுள்ளான்.

ராமர் கோயில் கட்டுவதற்க்கான போராட்டம் இந்தியாவிற்க்காவோ அல்லது ஹிந்துக்களுக்காகவோ மட்டும் இல்லை, மாறாக இங்கே அயோத்தியில் ராமர் கோயில் கட்டிய பின்பு அதே போன்றதொரு கோயில்களை லாஹூரிலும், ராவல்பின்டியிலும் கட்டுவோம் என்றும் அதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று கூறியுள்ளான்.
சிறிது நாட்கள் கழித்து மத்திய பிரதேச மாநிலம் ஹர்தாவில் ஆயிரக்கணக்கான சாதுக்களுக்கு முன்னால் பேசிய தொகாடியா பல லட்சம் வருடங்களுக்கு முன்னால் அயோத்தியில் ராமர் கோயில் இருந்தது என்றும், நாம் இப்போது அதே இடத்தில் ராமர் கோயில் கட்டுவது என்பது அயோத்தியின் பிரச்சனை இல்லை மாறாக கொள்கைக்கான போராட்டம் என்று கூறியுள்ளான்.
இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்றான். மேலும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளான்.


NEWS : MILLIGAZZETE - POPULAR FRONT - HARBOUR

Related

VHP 5249978088812750236

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item