ஹுஸ்னி முபாரக் வெளியேற வேண்டும் - அமெரிக்க செனட்டர்

எகிப்தில் மக்கள் திரள் போராட்டம் வெடித்துக் கிளம்பிய சூழலில் அந்நாட்டு சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் ராஜினாமாச் செய்யவேண்டுமென மூத்த அமெரிக்க செனட்டர் வலியுறுத்தியுள்ளார்.

எகிப்து மற்றும் துனீசியாவின் நிகழ்வுகளைக் குறித்து விவாதிக்க கூட்டப்பட்ட செனட் கூட்டத்திற்கு பிறகு செனட்டர் பில் நெல்சன் தனது கருத்தை வெளியிட்டார். இனிமேலும் முபாரக் ஆட்சியை விட்டு கீழே இறங்காமல் இருக்கமுடியாது.

பாதுகாப்பு படையை பிரயோகித்தும், இணையதளத்தை செயலிழக்கச் செய்தும் புரட்சியாளர்களை தடுக்கவியலாது. முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் போன்ற வலுவான கட்சிகளுக்கு வாசலை திறந்துவிட வேண்டும் என நெல்சன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்துடன் தங்களுக்கு எவ்வித தொடர்புமில்லை என வெள்ளைமாளிகை செய்தித் தொடர்பாளர் ராபர்ட் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

செய்தி:மாத்யமம்

Related

hosni mubarak 7960598464260925460

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item