வெடிக்குண்டு தயாரிக்க முயற்சி: வழக்கை மூடி மறைத்த கேரள போலீஸ்

லாட்ஜ் ஒன்றில் வைத்து வெடிக்குண்டு தயாரிக்க முயன்ற வாலிபரைக் கைதுச் செய்த கேரள போலீசார் அவரை சாதாரண குற்றத்தை சுமத்தி சிறையிலடைத்துள்ளனர். மேலும் எவ்வித தீவிரமான விசாரணையும் இவர் விவகாரத்தில் மேற்கொள்ளப்படவில்லை.

எர்ணாகுளத்தை சார்ந்தவர் லாயிட் பால்(வயது 24). இவர் ஸ்காட்லாந்தில் எஞ்சினீயரிங் பயின்றவர். இவர் மீது சில வழக்குகள் ஏற்கனவே பதிவுச் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் லாட்ஜ் ஒன்றில் வைத்து வெடிக்குண்டு தயாரிக்க முயன்றபொழுது கைதுச் செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து வெடிப்பொருட்கள், லேப்டாப், மொபைல் ஃபோன் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

லாயிட் பாலிடமிருந்து லேப்டாப் கைப்பற்றப்பட்டதை போலீசார் பத்திரிகைகளுக்கு தெரிவிக்கவில்லை. லேப்டாப் மற்றும் மொபைல் ஃபோன் ஆகியவற்றை வல்லுநர்களிடம் பரிசோதனைக்கு அனுப்பவில்லை. வெடிப்பொருட்களை இவரிடமிருந்து கைப்பற்றிய பிறகும் வேறு புலனாய்வு ஏஜன்சிகளுக்கு இவ்வழக்கை ஒப்படைப்பதுக் குறித்தும் போலீசார் ஆலோசிக்கவில்லை.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட லேப்டாப் மற்றும் மொபைல் ஃபோனை வல்லுநர்களின் பரிசோதனைக்கு தேவை என கோரவும் இல்லை. வெடிப்பொருளை தவறாக கையாண்டுள்ளார் என்ற சாதாரண வழக்கை இவர்மீது சுமத்தியுள்ளனர்.

ஸ்காட்லாந்தில் பயின்ற லாயிட் பாலிற்கு வெளிநாட்டு தொடர்பு ஏதேனும் உண்டுமா? என்பதுக் குறித்தும் விசாரிக்கவில்லை. இவர் மீது பல்வேறு வழக்குகள் கொச்சியில் பதிவுச் செய்யப்பட்ட பிறகும் இவருடைய குற்றப் பின்னணியைக் குறித்து வெடிக்குண்டு தயாரிக்க முயன்ற மர்மத்தைக் குறித்தும் போலீசார் விசாரிக்கவில்லை.

இவருக்கு மனோவியாதி எனவும், கல்விக் கடனை திருப்பி அடைப்பதற்காக திருட முயன்றார் எனவும் கூறி லாயிட்டை நிரபராதி என்று நிரூபிப்பதிலேயே குறியாக உள்ளனர் போலீசார். இவருடைய மொபைல் ஃபோனில் ஒன்றுமில்லை என வல்லுநர்களிடம் பரிசோதனைக்கு உட்படுத்தாமலேயே போலீசார் கூறுகின்றனர்.

இதேச் சூழலில் ஒரு முஸ்லிம் கைதுச் செய்யப்பட்டால் அம்மாநிலமே அல்லோல கல்லோலப்பட்டிருக்கும். இவர் குண்டுகளை வைத்துவிட்டு முஸ்லிம்களின் மீது பழிபோட திட்டமிட்டாரா? என்பதுக் கு்றித்தும் போலீஸ் விசாரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி:தேஜஸ்

Related

VHP 3352955336209767909

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item