லிபியாவில் மக்கள் எழுச்சி மரண எண்ணிக்கை 24 ஆனது

லிபியாவில் நடைப்பெற்று வரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் 24பேர் மரணமடைந்துள்ளதாக அமெரிக்காவை தலைமியிடமாகக் கொண்டு செயல்படும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு தெரிவித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களும் பாதுகாப்பு படையினருக்குமிடையே நடந்த மோதலில் ஏராளமானோருக்கு காயமேற்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை எதிர்ப்பு தினம் கடைப்பிடித்ததைத் தொடர்ந்து போராட்டம் வலுவடைந்துள்ளது. பெங்காசியின் வீதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று போராட்டம் நடத்தினர். இரவு நெடு நேரமாகியும் மக்கள் கலைந்து செல்லவில்லை. அல்பைதாவில் போராட்ட முகாம்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

லிபியாவின் ஐந்து நகரங்களில் போராட்டம் பரவியுள்ளதாகவும், ஆனால் லிபியாவின் தலைநகரில் நடந்த போராட்டத்தில் மக்கள் கூட்டம் குறைவாக உள்ளதாக பி.பி.சி தெரிவிக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள் மக்கள் மீது சர்வாதிகார அரசு கடுமையாக நடந்துக்கொள்கிறது. துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை என செய்திகள் கூறுகின்றன.

பெங்காசியிலும், அல்பைதாவிலும் மரணமடைந்தவர்களை அடக்க ஊர்வலம் போராட்டப் பேரணியாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டங்கள் வன்முறையாக வெடிக்கும் வாய்ப்புள்ளதால் போலீசார் எச்சரிக்கையுடன் செயல்படுகின்றனர். மரண எண்ணிக்கை 24-ஐ தாண்டியுள்ளதாக உறுதிச் செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

லிபியாவின் ஏகாதிபத்திய ஆட்சியாளர் முஅம்மர் கத்தாஃபியை ஆதரித்தும் திரிபோலியில் பேரணிகள் நடத்தப்பட்டன. இதற்கிடையே போராட்டங்கள் நடக்கும் க்ரீன் சதுக்கத்தில் கத்தாஃபி வருகைப் புரிந்ததாக புகைப்படங்களை தேசிய தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. எ.எஃப்.பியும் இதனை உறுதிச் செய்துள்ளது.

அதேவேளையில் பெங்காசியில் நேற்று ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற அரசு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. கோர்ட் ஹவுஸிற்கு வெளியே இப்போராட்டம் நடத்தப்பட்டது.

செய்தி:தேஜஸ்

Related

எகிப்தின் வீதிகளில் மக்கள் பிரவாகம்

எகிப்து நாட்டின் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் பதவி விலக்கோரி பத்துலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தஹ்ரீர் சதுக்கத்தில் ஒன்றுகூடியுள்ளனர். இன்று காலை முதல் மக்கள் தஹ்ரீர் சதுக்கத்தை நோக்கி படையெடுத்து ...

எகிப்து:10 லட்சம்பேர் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி

எகிப்து நாட்டு சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டுமெனக்கோரி அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைப்பெற்று வரும் மக்கள் திரள் போராட்டம் மேலும் வலுவடைந்துள்ளது. நாளை(01/02/2011) கெ...

பக்தர்களைத் தாக்கிய ராஜ் தாக்கரே குண்டர்கள்!

மும்பையில் உள்ள சித்திவிநாயக் கோவிலுக்கு வெளியே படுத்துத் தூங்கிய அப்பாவி பக்தர்களை தாக்கி காட்டுமிராண்டிகள் போல நடந்துள்ளனர் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சியினர்.நேற்று இரவு இந்த அக்கிரமம் நடந்துள்...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Hot NewsRecentArchive

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item