முஸ்லிம் லீக்குக்கு 3 தொகுதிகள், மமக-விற்கு 3 தொகுதிகள்

வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக்குக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேப்போன்று அதிமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அண்மையில் மு.க.ஸ்டாலினை சந்தித்து இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர்மொய்தீன் இன்று சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்தி்ப்புக்குப் பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காதர் மொய்தீன், வெற்றிகரமாக அமைந்துள்ள இந்தக் கூட்டணியில் தங்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், கூட்டணியின் வெற்றிக்கு தாங்கள் பாடுபடப் போவதாகவும் கூறினார்.

இதற்கிடையே அதிமுக கூட்டணியில் உள்ள மனித நேய மக்கள் கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Related

MMK 5224188510752762032

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item