இந்தியாவில் புதிய பயங்கரவாத இயக்கங்கள் - ப.சிதம்பரம்

இந்தியாவில் புதிய பயங்கரவாத இயக்கங்கள் தலைத் தூக்கியுள்ளன என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பல பகுதிகளில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் இவ்வமைப்புகளின் பங்கினைக் குறித்து சந்தேகிக்கப்படுவதாக அவர் கூறினார்.

மலேகான், சம்ஜோதா, மக்கா மஸ்ஜித், அஜ்மீர் உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ் உள்பட பல்வேறு ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கங்களின் பங்கு வெட்ட வெளிச்சமான சூழலில் உள்நாட்டு பாதுகாப்பைக் குறித்து விவாதிக்க அழைக்கப்பட்ட மாநில
முதல்வர்கள் கூட்டத்தில் உரைநிகழ்த்தினார் அவர்.

இந்த அமைப்புகளின் பெயர்களை குறிப்பிடுவதிலும், அவற்றின் சதித்திட்டங்களை வெளிப்படுத்துவதிலும் தங்களுக்கு எவ்வித தயக்கமுமில்லை என ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கங்களை மறைமுகமாக சுட்டிக்காட்டினார். அவர்கள் எந்த மதப்பிரிவைச் சார்ந்தவர்களாகயிருந்தாலும், அனைத்து பயங்கரவாத இயக்கங்களையும் சட்டத்தின் முன்னால் நிறுத்தி போதுமான தண்டனையை வாங்கிக் கொடுப்போம்.

பயங்கரவாதம் தொடர்பாக நமது தேசிய புலனாய்வு அமைப்பினரும் (என்ஐஏ), மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அதிகாரிகளும்
ஒவ்வொரு நாளும் புதிதாக ஆதாரங்களைத் திரட்டி வருகின்றனர். நமது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாதத்தின் புதிய பரிமாணங்கள் தொடர்பாக நம்மைத் தட்டி எழுப்புவதாக இந்த ஆதாரங்களை நாம் கருத வேண்டும்.

கடந்த இரண்டு வருடங்களாக உள்நாட்டு பாதுகாப்பு மேம்பட்டுள்ளது. புனே குண்டுவெடிப்பு மட்டுமே கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த ஒரேயொரு பயங்கரவாத தாக்குதலாகும் என ப.சிதம்பரம் தெரிவித்தார்.

KOOTHANALLUR

Related

RSS 1569738874776147431

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item