அரபு லீக்கிலிரு​ந்து லிபியா நீக்கம்

அரசுக்கெதிராக போராட்டத்தை தொடரும் மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு கொலை வெறிப்பிடித்து சொந்த நாட்டுமக்களை கத்தாஃபியின் அரசு கொன்றுக் குவித்து வரும் சூழலில் அந்நாட்டை அரபு லீக்கிலிருந்து வெளியேற்றியதாக அரபுலீக்கின் பொதுச்செயலாளர் அம்ரு மூஸாதெரிவித்துள்ளார்.

லிபியாவின் நிலைமைகளை குறித்து ஆராய கூடிய அரபுலீக்கின் ஆலோசனைக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. இத்தகவலை அல்ஜஸீரா முதன்முதலில் வெளியிட்டுள்ளது.

லிபியாவின் ஏகாதிபத்தியவாதி முஅம்மர் கத்தாஃபி நேற்று தேசியத் தொலைக்காட்சியில் தோன்றி பேட்டியளித்திருந்தார். கடைசிமூச்சு இருக்கும்வரை போராடுவேன். நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான பேச்சே இல்லை. தேசத்திற்கெதிராக போராடும் கடைசி மனிதன் இருக்கும்வரை கொலைச் செய்வோம் என்ற கத்தாஃபியின் வெறித்தனமான பேட்டி வெளிவந்ததையடுத்து போர் விமானங்கள் மக்கள் மீது குண்டுவீசித் தாக்குதலை நடத்தின.

பதவியை ராஜினாமாச் செய்யமாட்டேன், சொந்த நாட்டு குடிமக்களை கொன்றுக் குவிப்பேன் என கத்தாஃபி தெரிவித்தது எல்லை மீறியச் செயலாகும் என அம்ரு மூஸா தெரிவித்துள்ளார்.

செய்தி:மாத்யமம்

Related

muslim country 4416360709864321835

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item