காவி "மெளலானாக்கள்" - சங்க்பரிவாரின் புதுமுயற்சி

முஹம்மது வாஹித் ஜிஸ்தி தலைமையில் 15 பேர்கள் அடங்கிய காவி மெளலானாக்களின் கும்பல் ஒன்று லக்னோவில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் மச்சாலி மஹால், மாடல் டவுன், பஈஸி மஸ்ஜித் ஆகிய பகுதிகளிலுள்ள சாக்கடை ஓடும் சந்து பொந்துகளிலெல்லாம் சிரமத்துடன் நடந்து சென்று சங்க்பரிவாரின் தத்துவத்தை பிரச்சாரம் செய்து வருகிறது.

குறுகிய காலத்தில் அதிகளவில் விற்பனையாகியுள்ளதாக கூறப்படும் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஒழுக்கங்களை(?) விளக்கும் 24 பக்கங்களைக் கொண்ட இச்சிறிய புத்தகம் 'காவி பயங்கரவாதத்தைக் குறித்த அவதூறுகள் மற்றும் ராமஜென்மபூமி இயக்கத்திற்கு எதிரான தவறான தகவல்கள்' என்ற ஆர்.எஸ்.எஸின் எண்ணங்களை வெளிப்படுத்தும் செய்திகளைக் கொண்டதாகும்.

சில காலத்திற்கு முன்பு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வைத்து ஜும்ஆ மஸ்ஜித் இமாம் அப்துல்லாஹ் புகாரியிடம், 'RJB காம்ப்ளக்ஸை முந்தைய அயோத்தி மன்னரிடம் ஒப்படையுங்கள்' எனக்கூறி அநாகரீகமாக நடந்துக்கொண்டார்.

RSS வீடுவீடாக சென்று நடத்திவரும் வரும் 'க்ரிஹ் சம்பர்க் அபியான்' என்ற கலந்துரையாடல் பிரச்சாரத்தின் மூலம் மக்களிடையே பல்வேறு வகையான கருத்துக்கள் உருவாகியுள்ளன.

60 ஆண்டு காலத்தில் முதல் முறையாக காக்கி அரைக்கால் நிக்கர் அணிந்தவர்களை மச்சாலி மஹால் வீதிகளில் நெருக்கமாக பார்க்க முடிகிறது. இருந்த போதும் காக்கி நிக்கர் அணிந்தவர்களும் தொப்பி அணிந்தவர்களும் ஒன்றாக போகக் கூடாது. என ஆலம் என்பவர் தயக்கத்துடன் கூறுகிறார்.

முஸ்லிம் ராஷ்ட்ரியமஞ்ச் விபாக்பிரசாரக் குழுவின் தேசிய கண்வீனரான லக்னோவைச் சார்ந்த டாக்டர்.உமேஷ் குமார், முஹம்மத் அப்சல் என்பவருடன் இக்குழுவை வழி நடத்திச் செல்கின்றார். பெரும் பாலான முஸ்லிம் சகோதரர்கள் இது மிகவும் உணர்ச்சிப் பூர்வமான அனுபவமாக உள்ளது எனத் தெரிவித்ததாக உமேஷ் கூறுகிறார்.

முஹம்மது ஆரிப் மற்றும் ஜிஸ்தி ஆகியோர் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துக்களை கூறி வருகின்றனர் என்பதால் இவர்கள் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என பொது மக்கள் ஒரு வருடகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் குமார் எங்களுடைய இலட்சியம் சிறிது சிறிதாக வெற்றி பெற்று வருகிறது. நாங்கள் கடந்த இரு தினங்களில் மட்டும் 26,௦௦௦ புத்தகக் குறிப்பேடுகளை மக்களிடம் விநியோகித்து உள்ளோம். அதில் பெரும்பாலான மக்கள் குறைந்தது 5 ரூபாய் நன்கொடை கொடுக்க விருப்பப்படுகின்றனர். முஸ்லிம்கள் கூட தங்களின் நன்கொடைகளை அளித்து வருகின்றனர். இதிலிருந்து எங்களுக்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கை புரிந்துக்கொள்ள முடிகிறது என்றும் அவர் கூறினார்.

இந்த புத்தகத்தில் சில கடுமையான வார்த்தைகளைக் கொண்ட செய்திகள் மற்றும் சில விரும்பத்தகாத பதிவுகள் ராகுல் காந்தி குறித்து விக்கிலீக்ஸ்ல் வெளியிட்ட அறிக்கைகள் முக்கியமாக குறிப்பிடப்பட்டுள்ளன.

சங்பரிவார் மற்றும் சிமி ஆகிய அமைப்புகள் இரண்டுமே பயங்கர மானவை என்பதை ராகுல் காந்தி மதிப்பீடுச் செய்துள்ளதை பார்த்து சிலர் ஏளனம் செய்கின்றனர் அது ஒரு புறம் இருந்தாலும் ராகுல் காந்தி சின்னப்பையன் அவருக்கு காங்கிரஸ் மற்றும் அவரது மூதாதையர்கள் குறித்த வரலாறு கூடத் தெரியாது என்றும் கூறப்பட்டுள்ளன.

திக் விஜய் சிங்கைப் பற்றி குறிப்பிடுகையில் ஒருவர் எப்படி அரசியலில் சரிவை சந்திக்கக் கூடும் என்பதை நிரூபித்துள்ளார். என்றும் கூறப்பட்டுள்ளது.

பாலைவனதூது 

Related

muslim 1162012473054440437

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item